புதிய 5 பெரு நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு
8 தை 2016 வெள்ளி 17:43 | பார்வைகள் : 10182
ஏனைய பால்வெளி மண்டலங்களில் புதிதாக 5 பெரு நட்சத்திரங்களை (சுப்பர் ஸ்டார்) நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமியிலிருந்து 10,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, மிக அதிக ஒளியை உமிழக் கூடிய எடா கரினே நட்சத் திரத்தைப் போன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவைகள் உள்ளன.
எடா கரினே நமது சூரியனைப் போன்று குறைந்தது 10 மடங்கு திணிவைக் (மாஸ்) கொண்டது.
நாசாவின் ஸ்பிட்ஸர், ஹப்பிள் தொலைநோக்கிகளால் பெறப்பட்ட தரவுத் தொகுப்புகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இந்த புதிய நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை அதிக அளவிலான இரசாயனத் தனிமங்களை வெளியிடுகின்றன.
இதுதொடர்பான ஆய்வுக்கட்டுரை ”தி அஸ்ட்ரோ பிஸிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ்” இதழில் வெளியாகியுள்ளது.