Paristamil Navigation Paristamil advert login

சந்திரனில் மறைந்திருக்கும் மர்மம்! அதிர்ச்சி வீடியோ

சந்திரனில் மறைந்திருக்கும் மர்மம்! அதிர்ச்சி வீடியோ

11 மாசி 2015 புதன் 17:56 | பார்வைகள் : 9999


 பூமியில் இருந்து பார்த்தால் மறைக்கப்பட்ட சந்திரனின் மறுபக்கம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோவை நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. 

 
சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய துணைக்கோள் சந்திரன் ஆகும். பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரி தொலைவு 384, 403 கி.மீ..மனிதர்கள் கால் பதித்த ஒரே  கோள் சந்திரன் ஆகும். புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு.சந்திரனில் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் சந்திரனில் காற்று இல்லை.
 
பூமியை நோக்கி எப்போதும் தனது ஒரே  முகத்தைக் சந்திரன் காட்டி வருகிறது. நமக்கு காட்டும் வெளிச்சமான பகுதியில் உயர்நிலங்களுக்கும் விண்கல் வீழ் பள்ளங்களுக்கும் இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் அதன் இருண்ட மறு பக்கம் குறித்து மர்மங்களே நிலவி வந்தன. தற்போது அமெரிக்காவின் நாசா விண் வெளி ஆய்வு மையம் நிலவின் இருண்ட மறுபக்கம் குறித்து அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
 
லுனார் ரெகனசன்ஸ் ஆர்பிட்டர் தகவலின் படி  நாசாவின் அறிவியல் காட்சிப்படுத்தல் ஸ்டூடியோ இதை தயாரித்து உள்ளது. இந்த வீடியோ பூமியில் மறைக்கபட்ட நிலாவின் பக்கத்தில் மிகப்பெரிய குழிகளை காட்டுகிறது.
 
அது மரியா என்று அழைக்கப்படும் கரும் புள்ளிகளாகும். மனிதர்கள் பார்க்காத நிலவின் இருண்ட பகுதி குறித்து ஒரு தவறான கண்ணோட்டம் இருந்தது என்றாலும் பூமியை போன்றே சூரியன் சந்திரனின் அந்த பகுதியையும் ஓளிரச்செய்கிறது.
 
சந்திர ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் 2009 முதல் நிலவு படமெடுத்து வருகிறது. நாசா நூற்றுகணக்கான டெராபைட் படங்களை கோர்த்து இந்த வீடியோவை உருவாக்கி உள்ளது.
 
ரஷ்யாவை சேர்ந்த லூனா 3 1959 முதன் முதலில் நிலவின் இருண்ட பகுதியை படம் எடுத்து அனுப்பியது.