ராட்சத வளையங்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
30 தை 2015 வெள்ளி 08:59 | பார்வைகள் : 10490
சனி கிரகத்தை போன்று வளையங்களுடன் கூடிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய கிரகம் ஒன்று சனி கிரகத்தை போன்றே வளையங்களுடன் உள்ளது. இதற்கு ஜெ 1407 பி என பெயரிட்டுள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த வளையம் 30 அடுக்கு வளையங்களால் உருவாகியுள்ளது. இது சனி கிரகத்தின் வளையத்தை விட 200 மடங்கு பெரியது.
இந்த கிரகத்தை சுற்றி 12 கோடி கி.மீட்டர் சுற்றளவு பரந்து விரிந்து கிடக்கிறது என்றும், இதன் மீது படர்ந்திருக்கும் ஒளி தான் வளையம் போன்று காட்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெதர்லாந்தின் வெய்டன் வானிலை நிறுவனம் மற்றும் ரோசஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வு மூலம் இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.