வெள்ளி கிரகத்தில் மிதக்கும் நகரம்
23 மார்கழி 2014 செவ்வாய் 17:20 | பார்வைகள் : 9974
விண்வெளியில் மனிதர்கள் வசிக்கும் மிதக்கும் கிராமம் ஒன்றை அமைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா திட்டமிட்டு வருகிறது.
வெள்ளி கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள மனிதர்களைத் தாங்கிச் செல்லும் சிறப்பு விண்கலன்கள் செலுத்தவும், அங்கு மனிதர்கள் வசிக்கும் விதமாக விண்ணில் மிதக்கும் நகரம் அமைக்கவும் நாஸா திட்டமிட்டுள்ளது.
நாஸாவின் விண்வெளிப் பயண ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த டேல் ஆர்னி, கிறிஸ் ஜோன்ஸ் ஆகியோர் இது குறித்து தகவல் தருகையில், பூமியைப் போன்ற சுற்றுச்சூழல் வெள்ளி கிரகத்தில் உள்ளது என நம்ப இடமுள்ளது. அதன் தரைப்பரப்பை ஆராயும் முன்பு, அதன் விண்வெளிப் பகுதியை ஆராய ஒரு விண்கலனைச் செலுத்த திட்டமிட்டு வருகிறோம்.
தற்போதைய தொழில்நுட்பத்துடன், மனிதர்கள் வெள்ளி கிரகம் சென்று வர 440 நாள்களாகும்.
வெள்ளி கிரகத்தின் வான்வெளிப் பகுதியில், பூமியை விடச் சற்றுக் குறைவான ஈர்ப்பு சக்தி உள்ளது.
அந்த கிரகத்தில் போதுமான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, மிதக்கும் நகரம் ஒன்றை அமைக்க இயலும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.