செவ்வாய் கிரகத்தில் உயிரினம்!
4 கார்த்திகை 2014 செவ்வாய் 12:22 | பார்வைகள் : 10065
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகள் வெகுகாலமாகவே நடந்து வருகிறது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது.
அங்குள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக, மாஸ்ட்கேம் என்ற கமெராவும் பொருத்தப்பட்டுள்ளது.
கியூரியாசிட்டி அனுப்பி வரும் புகைப்படங்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் அனுப்பிய படங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது.
டைனோசருக்கும் முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் முதலை போன்ற ஒரு உயிரினம் வாழ்ந்ததாக சுட்டிக் காட்டி உள்ளனர்.
வானியல் ஆராய்ச்சியாளர் ஜோ ஓயிட்(வயது 45) ஒரு பாறை காட்சிகளை ஆராய்ச்சி செய்யும் போது அது ஒரு முதலையின் மூக்கு வடிவம் போல் தெரிந்தது. என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுபற்றி நாசா எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.