செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் புழுதிப் புயல்
14 ஐப்பசி 2014 செவ்வாய் 08:43 | பார்வைகள் : 10073
இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமான அனுப்பிய மங்கள்யான் விண்கலம் அனுப்பிய புகைப்படத்தில் இருந்து செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் நிலை இருந்துள்ளது என தற்போது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தை வெளியிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செவ்வாயின் கனிம வளங்களை ஆய்வு செய்யவும், மீத்தேன் வாயு குறித்த ஆய்வு மற்றும் மனிதன் வாழ தகுதியுள்ளதா என்பது போன்ற விவரங்களை அறிய இஸ்ரோ செவ்வாய்க்கான மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக அனுப்பின.
இந்த விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு தற்போது அந்த கிரகத்தை சுற்றி வருகிறது. மங்கள்யான் விண்கலம் குறைந்தபட்சம் 6 மாதங்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்து, செவ்வாய் கிரகம் தொடர்பான தகவல்கள் கொண்ட புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைக்கின்றது.
இந்நிலையில், மங்கள்யான் கடந்த 25ஆம் திகதி செவ்வாய் கிரகத்தை முதல் முறையாகப் படம் பிடித்து அனுப்பியது.
மங்கள்யானில் உள்ள அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்ட இந்தப் படங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஆய்வு செய்தபோது, செவ்வாயின் வட துருவத்தில் புழுதிப் புயல் வீசி வருவதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த விபரம் இன்னும் உலகில் எந்த நாடும் கண்டுபிடிக்காத உண்மை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இஸ்ரோ அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் இஸ்ரோவின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், செவ்வாயில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படம் 74 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவுக்கு மேலிருந்து எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.