Paristamil Navigation Paristamil advert login

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

11 ஐப்பசி 2014 சனி 19:16 | பார்வைகள் : 12182


 இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டொலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை இணைந்து நிறுவும் பணிகளை ஹவாய் தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 
ஹவாய் தீவில் இருக்கும் புகழ்பெற்ற மவுன கிய எரிமலைக்கு அருகில் நிறுவப்படும் இந்த தொலைநோக்கி தான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும்.
 
500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மிகச்சிறிய நாணயத்தைக்கூட மிகத்துல்லியமாக காட்டக்கூடிய அளவுக்கு இந்த தொலைநோக்கி திறன் படைத்ததாக இருக்கும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த பிரம்மாண்ட தொலைநோக்கியானது, வானியல் விஞ்ஞானத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும் என்று கருதப்படுகிறது.
 
இந்த மிகப்பிரம்மாண்ட தொலைநோக்கியின் கட்டுமானம் 2022 ஆம் ஆண்டு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இக்கட்டுமானப்பணிக்கு எதிராக பாரியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மவுன கிய எரிமலைக்கு அருகில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்