Paristamil Navigation Paristamil advert login

செவ்வாய் கிரகத்தில் மனித எச்சங்களா?- நாசா விளக்கம்

செவ்வாய் கிரகத்தில் மனித எச்சங்களா?- நாசா விளக்கம்

29 ஆவணி 2014 வெள்ளி 18:50 | பார்வைகள் : 9370


 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆய்விற்காக நாசா, செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது.

 
அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில், அங்கு விலங்குகளின் தொடை எலும்புகள் கிடப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. அதன்மூலம், டைனோசர்கள் தோன்றி மறைவதற்கு முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் உயிர் வாழ்ந்ததாக யூகங்கள் எழுந்தன. இதுபற்றி இணையதளங்களில் பரபரப்பாக கருத்து பரிமாற்றங்கள் நடந்தன.
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த தோற்றம், எலும்பு அல்ல, வெறும் பாறைதான் என்று நாசா விளக்கமளித்துள்ளது. 
 
காலமாற்றத்தால், பாறைகள் அரிக்கப்பட்டு, அவை புதைபடிவங்களாக கிடப்பதே, எலும்பு போன்று தோன்றுவதாக நாசா கூறியுள்ளது. 
 
ஒருவேளை அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருந்தால் கூட, அவை நுண்ணுயிர் போன்ற சிறிய உயிர்களாகத்தான் இருந்திருக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்