Paristamil Navigation Paristamil advert login

செவ்வாயில் ஒட்சிசனை உருவாக்க தயாராகும் புதிய ரோவர் விண்கலம்

செவ்வாயில் ஒட்சிசனை உருவாக்க தயாராகும் புதிய ரோவர் விண்கலம்

5 ஆவணி 2014 செவ்வாய் 10:52 | பார்வைகள் : 9960


2021 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கிரகத்தில் தரையிறங்கவுள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் புதிய ரோவர் விண்கலமானது அந்தக் கிரகத்தின் மேற்பரப்பில் ஒட்சிசனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்­கா­லத்தில் செவ்­வாய்க்­கி­ர­கத்­திற்கு மனி­தர்கள் செல்­வதை சாத்­தி­ய­மாக்கும் வகையில் அந்தக் கிர­கத்தில் 7 விஞ்­ஞான செயற்­றிட்­டங்­களை அந்த ரோவர் விண்­கலம் முன்­னெ­டுக்­க­வுள்­ள­துடன் செவ்வாய்க் கிர­கத்­தி­லான உயிர் வாழ்க்­கைக்­கான ஆதா­ரங்கள் குறித்து தீவிர ஆராய்ச்­சியை மேற்­கொள்­ள­வுள்­ளது.
 
இதபோது மேற்­படி விண்­கலம் செவ்வாய்க்கிர­கத்தில் செல்­வாக்குச் செலுத்தும் காப­னீ­ரொட்­சைட்டு வாயுவை ஒட்­சி­ச­னாக மாற்றும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­ட­வுள்­ளது.
 
இது அங்கு மனி­தர்கள் வாழ்­வதை சாத்­தி­ய­மாக்­கு­வ­துடன் அக்­கி­ர­கத்­துக்கு பய­ணத்தை மேற்­கொள்ளும் ஏவு­க­ணைகள் மீளப் பூமிக்கு திரும்பும் நட­வ­டிக்­கைக்­காக எரி­பொ­ருளைப் பெறு­வ­தற்கும் வழி­வகை செய்யும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
 
மேலும் அந்த ரோவர் விண்கலம் இரு புகைப்படக் கருவிகள், காலநிலை பரி சோதனை உபகரணம் என்பனவற்றை உள்ள டக்கியிருக்கும் என கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்