பூமியை விட 17 மடங்கு திணிவுடைய இராட்சத கோள் கண்டுபிடிப்பு
3 ஆனி 2014 செவ்வாய் 13:29 | பார்வைகள் : 9984
பூமியை விட சுமார் 17 மடங்கு திணிவுடைய மெகா பூமி என அழைக்கப்படும் புதிய வகை கோளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்திரமொன்று கெப்லர் - 10சி என்ற மேற்படி கோள் வலம் வருகிறது.
இந்தக் கோள் தொடர்பில் அமெரிக்க போஸ்டன் நகரிலுள்ள அமெரிக்க விண்வெளியியல் சபை கூட்டத்தில் விபரிக்கப்பட்டது.
அதிகளவு ஹைதரசன் வாயுவைக் கொண்ட இந்தக் கோள் நெப்ரியூன் மற்றும் வியாழக கிரகத்தையொத்தது என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை இராட்ச பூமி என மேற்படி ஆய்வில் பங்கேற்ற ஹர்வார்ட் ஸ்மித்ஸோனியன் விண் பெளதீகவியல் நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் திமிதர் சஸ்ஸெலோஸ் தெரிவித்துள்ளார்.
மேற்படி கோளானது 29,000 கிலோ மீற்றர் விட்டமுடையது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமியின் அகலத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்கானதாகும். எனினும் அதன் திணிவு பல மடங்கு அதிகமானதாகும்.
இந்தக் கோள் 11 பில்லியன் ஆண்டுகள் வயதானதாகும். ஆனால் பூமியின் வயது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாகும்.
இந்தக்கோளின் அடர்த்தி ஒரு கன சதுர மீற்றருக்கு 7.5 கிராமாகும். பூமியின் அடர்த்தி ஒரு கன சென்றிமீற்றருக்கு 5.5 கிராமாகும். இந்தக் கோள் கனேரி தீவுகளில் டெலிகோபியோ நஸினல் கலிலியோ விண்வெளி தொலைநோக்கியிலுள்ள ஹார்ப்ஸ் நோர்த் உபகரணத்தின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கோள் தனது நட்சத்திரத்தை ஒவ்வொரு 45 நாட்களுக்கும் ஒரு தடவை வலம் வருகிறது.