சூரியனில் வெடிப்பு - செயற்கை கோள்களுக்கு பாதிப்பு
14 வைகாசி 2014 புதன் 13:47 | பார்வைகள் : 10253
சூரியனில் ஏற்பட்டு உள்ள துளை கருப்பு நிறத்தில் தெரிகிறது என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், சூரியனின் தெற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த துளையினால், சூரிய காற்று வெகு வேகமாக வெளியேறுவது புகைப்படமாக பிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூரிய காற்றால் பூமிக்கு பாதிப்பு மிக குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாசா எடுத்துள்ள வீடியோவில், பெரிய அளவிலான அந்த துளை ஒளிர்வதும், கதிர்கள் அதில் இருந்து தெறித்து விழுவதுமாக இருப்பது தெரிகிறது. இத்தகைய துளைகள் சூரிய சுற்றின்போது, எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே தெரிய வரும். எனினும் வீழ்ச்சியடையும் சுற்றில் அந்த துளைகள் அதிகமாக வெளியே தெரிய வரும்.
அவற்றில் சதுர வடிவிலான துளை அதிக கவனிக்கத்தக்க அம்சங்களை கொண்டு உள்ளது என்று விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சூரிய காற்றால் ஏற்படும் கதிர்வீச்சு செயற்கைக்கோள்களை பாதிக்கும் அபாயம் உள்ளது.
அதனை சரி செய்வதற்கு ஏராளமான நிதி இழப்பும் ஏற்படும். அதிக மின்னூட்டம் பெற்ற துகள்கள் பூமியின் காந்த புலத்தை பாதித்து அதனால் விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும். பெரிய அளவிலான கதிர்வீச்சுகள் மின்சார உற்பத்தி செய்யும் இடத்தில் மின்சாரத்தை தோற்றுவித்து ஆற்றல் வினியோக நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.