பூமியின் மீது மோதிய விண்கற்கள்!: அதிர்ச்சித் தகவல்
21 சித்திரை 2014 திங்கள் 12:37 | பார்வைகள் : 10546
பூமியின் மீது விண்கற்கள் 3 முதல் 10 முறை அதிகமாக மோதி பாதிப்பை ஏற்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.
நாளை உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது, இத்தினத்தன்று விண்வெளியில் பயணம் செய்த மூத்த விண்வெளி வீரர்களான எட் லூ, டாம் ஜோன்ஸ் மற்றும் பில் ஆண்டர்ஸ் ஆகியோர் திகிலூட்டும் செய்தி ஒன்றினை தெரிவிக்க உள்ளனர்.
சியாட்டில் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இது குறித்த தகவலை வெளியிட முடிவு செய்துள்ள வீரர்கள், இதற்கு தங்களிடம் போதிய ஆதாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பில், எட் லூ தலைமையிலான பி612 என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2001ம் ஆண்டில் இருந்து 26 மல்டி & கிலோ டன் வெடிப்புகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் விண்கற்கள் மோதலால் நடந்துள்ளவை.
அதன்படி, விண்கற்கள் மோதல் என்பது எப்பொழுதாவது நடைபெறுவது என்ற கூற்றில் உண்மையில்லை.
நாம் இதற்கு முன்பு அறிந்திருப்பதை விட 3 முதல் 10 மடங்கு அதிகமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த 2001ம் ஆண்டில் இருந்து மிக பெரிய விண்கற்கள் வருடத்திற்கு 2 முறை என்ற அளவில் தனது தாக்கத்தை பூமி மீது மோதி ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.