செவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்!
11 சித்திரை 2014 வெள்ளி 12:09 | பார்வைகள் : 10849
செவ்வாய் கிரகத்தில் நீர் உறைந்த நிலையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலக மக்களில் பெரும்பாலானோர் செவ்வாய் கிரகத்தில் குடியேர விண்ணேப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
மேலும் செவ்வாய் கிரகத்தில் நிலபரப்புக்கு கீழ் நீர் உறைந்து கிடப்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே செவ்வாய் கிரத்தில் இருந்த தண்ணீர் விண்வெளியில் வெளியேறிவிட்டது என்றும், மீதமுள்ள நீர் உறைந்து கிடக்கின்றது எனவும் புதிய ஆய்வின் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனால் காலப்போக்கில் செவ்வாய் கிரகத்தில் இருந்த நீர் ஆவியாக வெளியேறிவிட்டது என்று விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அனால் தற்போதும் ஏராளமான நீர் செவ்வாய் கிரகத்தில் உள்ளது என்று ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.