Paristamil Navigation Paristamil advert login

சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

14 பங்குனி 2014 வெள்ளி 09:34 | பார்வைகள் : 11142


சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலி நாட்டில் உள்ள அடகாமா என்ற இடத்தில் மிகப்பெரிய டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்மூலம் மஞ்சள் நிறத்தினால் ஆன ராட்சத நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது சூரியனை விட 1,300 மடங்கு பெரியதாக உள்ளது.

இது குறித்து பிரான்சில் நைஸ் என்ற இடத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த ஆலிவர் செகினியூ தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 12 ஆயிரம் ஒளி தூரத்தில் உள்ளது. மேலும் இது சூரிய குடும்பத்தை சேர்ந்தது.

இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நட்சத்திரங்களில் இது 10–வது ஆகும். அவற்றில் மிகப்பெரிய நட்சத்திரமான பெடெல்ஜியசை விட 50 சதவீதம் பெரியது. இது சூரியனை விட 10 லட்சம் மடங்கு சிவப்பு நிறத்தை உமிழக்கூடியது.

இந்த நட்சத்திரத்துக்கு எச்.ஆர். 5171 ஏ என பெயரிட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்