Paristamil Navigation Paristamil advert login

715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

28 மாசி 2014 வெள்ளி 12:37 | பார்வைகள் : 10587


புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டையில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை மனிதர்களால் அடையாளம் காணப்பட்ட கோள்களின் எண்ணிக்கை வியக் கத்தக்க வகையில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.

புதிய கோள்களைத் தேடுவதற்காகவே அமைக்கப்பட்ட கெப்ளர் தொலைநோக்கி, 715 புதிய கோள்களைக் கண்டறிய உதவிகரமாக இருந்துள்ளது. நாம்வாழும் பூமியைப் போன்றே வேறு கோள்கள் இருக்கக்கூடுமா என்ற ஆசையின் விளைவே இந்தத் தேடுதல் வேட்டை. நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே தற்போது மட்டும் 715 புதிய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன என நாசா அறிவித்திருக்கிறது.

கெப்ளர் தொலைநோக்கி புதிய உத்தி மூலம் புதிய கோள்களுக்கான தேடலில் அதிகப்படியான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நாசா ஆய்வாளர் லிஸ்ஸாயர் கருத்து தெரிவிக்கையில்,

மனிதர்களுக்குத் தெரிந்த கோள்களின் எண்ணிக்கை இன்று இரு மடங்காகியிருக்கிறது. 305 வெவ்வேறு நட்சத்திரங்களை 715 கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் அறிந்த கோள்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது” என்றார்.

இந்த புதிய கோள்கள் அனைத்தும் கெப்ளர் நிறுவப்பட்ட 2009 மார்ச் முதல் 2011 வரையிலான காலகட்டங்களில் கண்டறியப்பட்டவை. புதிய பகுப்பாய்வு முறையின் மூலம் அவை கடந்த புதன்கிழமை உறுதி செய்யப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் வரும் மார்ச் 10ஆம் திகதி வெளிவரவுள்ள ஆய்விதழில் வெளியிடப்படவுள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்