விண்ணில் ஊசலாடும் இரும்புக்குண்டு
5 மாசி 2014 புதன் 17:40 | பார்வைகள் : 10905
புதன் (Mercury) சூரியனில் இருந்து பிரிந்து உருவான கோள் அல்ல. இதற்கான முக்கியக் காரணம் பிற கோள்களுக்கும் புதனுக்கும் மிகப்பெரும் இயற்பியல் வேறுபாடு உள்ளது, புதன் கோளின் கட்டமைப்பு முழுவதுமே இரும்பால் ஆனது, கோள்கள் அனைத்தும் பல வித வேதிப்பொருட்களின் கலவையாகும்.
காரணம், பல்லாயிரம் ஆண்டுகளாக சூரியனில் இருந்து பிரிந்து அவை திடமாகி விண்வெளியில் உள்ள தூசுகள் கலந்து இதர இயற்பியல் மாற்றங்களுக்கு உட்பட்டு சூரியனை வலம் வருகின்றன. ஆனால், புதன் மட்டும் இந்த இயற்பியல் மாற்றங்களுக்கு உட்படாமல் மிகப்பெரிய காந்த கோளமாக சூரியனை வலம் வந்துகொண்டு இருக்கிறது.
இதனடிப்படையில் புதன் சூரியக்கோளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்று அல்ல. விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருந்த ஏதோ இரு பெரிய விண்கல் ஒன்று சூரியனின் ஈர்ப்பால் சூரியமண்டலத்தில் உள் இழுக்கப்பட்டு சூரியனை நெருங்க நெருங்க அதன் அனைத்து உபரிப்பொருட்களும் ஆவியாகி இறுதியில் இரும்புக் குழம்பு மிஞ்சியது.
சூரிய வெப்பத்தில் உருகிய நிலையில் உருகிய இரும்புக் குண்டில் காந்தப்புலன் தோன்றியது. இதன் காரணமாக, நாம் சாதாரணமாகப் பரிசோதனை செய்யும் ஒரே துருவ மய்யங்கள் ஒன்றை ஒன்று விலக்கும் என்ற கொள்கையின்படி, புதனின் எதிர் முனையும் சூரியனின் எதிர் காந்த முனையும் எதிர் வினைகொண்டு புதனைத் தள்ளியே வைத்து விட்டது. நாளடைவில் புதன் இறுகி நமது நிலவின் அளவில் உள்ள மிகப்பெரிய இரும்புக் கோளமாக மாறிவிட்டது.
இன்றும் புதன் நமது இதர கோள்களைப்போல் தன்னைத்தானே சுழலுவதில்லை. சூரியனை மட்டும் சுற்றிவருகிறது. ஆகையால், இங்கு இரவு பகல் கிடையாது. ஒருவேளை நமது பூமியைப்போல் புதனும் தன்னைத்தானே சுழல ஆரம்பித்தால் இந்நேரம் சூரியனில் புதைந்து காணாமல் போயிருக்கும்.
புதனின் குறுக்குவட்டப் பாதை
ஆரம்ப காலத்தில் கோள்களை அவற்றின் குணாதிசயங்கள் மூலம் அடையாளம் கண்டு கொண்ட நம் முன்னோர்கள் புதனையும் கோள் வரிசையில் சேர்த்தனர். ஆனால், மற்ற கோள்களைப்போல் புதன் அவ்வளவு எளிதில் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
சூரிய ஒளிக்கற்றையின் தீவிரம் காரணமாக அவ்வளவு எளிதில் நாம் புதனைக் காணமுடியாது. மிகவும் அரியவகையில் அதிகாலையில் புதன் சில வினாடிகளுக்குத் தென்படும். இதன் காரணமாகத்தான் நம் முன்னோர்கள் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றார்கள்.
புதனின் தரைத்தளம் கடுமையான கொதி நிலையில் இருந்தாலும் உருகாததற்குக் காரணம், இரும்பு மற்றும் சிலிகன் கொண்ட தரைத்தளம் மிகவும் விரைவாக வெப்பத்தை மய்யப்பகுதிக்கு அனுப்பி விடுகிறது. இதனால் இதன் மய்யப்பகுதி உருகிய குழம்பு நிலையில் இருக்கிறது.
மற்ற அனைத்துக் கோள்களையும்விட இதன் மய்யப்பகுதி கடுமையான வெப்பநிலையில் உள்ளது.
வாயுக்கள்:
புதனைப் பொருத்தவரை சூரியனுக்கு அருகில் இருப்பதால் மெல்லிய வாயுக்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இங்கும் வெள்ளிக் கோள்களைப்போல் அதிக அளவில் ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் மிகவும் குறைந்த அளவில் கார்பனும் இருக்கிறது.
புதனின் தரைத்தளத்தில் கார்பன் இரும்புத் தாதுவுடன் கலந்து இருந்தாலும் தரைப்பகுதியில் கார்பன் படிமங்கள் வாயு நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இதுவும் ஓர் இயற்கையின் பாதுகாப்புதான்.
சூரியனின் வெப்ப அலைகள் திடீரென மேலெழும்பும் போது ஏற்படும் வெப்பம் புதனின் தரைத்தளத்தைத் தாக்கவரும். தரையில் பெருகி இருக்கும் கார்பன் அணுக்கள் அதைவாங்கி புதனின் மய்யப்பகுதிக்கு அனுப்பி விடும். இதன் காரணமாக புதனின் மய்யக்கரு எப்போதும் வெப்பமாகவே உள்ளது. இந்த வெப்பம்தான் புதனின் காந்த விசை என்றும் குறையாமல் இருக்க முக்கியக் காரணமாக உள்ளது.
புதனில் நீர்:
புதன் கோளிலும் நீர் உள்ளது, சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள ஒரு கோளில் நீர் உள்ளது என்பது வியப்பான தகவலாக இருக்கிறது அல்லவா! ஆம், தன்னத்தானே சுழலாத கோளான புதனின் ஒரு பகுதி எப்போதும் இருளிலேயே இருக்கும். ஆகையால் நமது புவியைப்போலவே புதனின் துருவங்களில் கடுமையான குளிர் சூழ்ந்துள்ளது.
சனிக்கோளின் வளையங்களில் பனிக்கட்டிகள் உருவாகிய காலகட்டத்தில்தான் புதன் கோளிலும் பனிக்கட்டிகள் சிதறியிருக்க வேண்டும். அப்போது சிதறிய பனிக்கட்டிகள் புதனின் துருவப்பகுதிகளில் உறைநிலைக்கு மாறி இன்று வரை புதன் கிரகத்தில் நீர் பனிக்கட்டியாக அதன் துருவங்களில் உள்ளது.
இவை பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களாக இருந்ததால் இன்றும் ஆவியாகாமல் உள்ளது. புதன் கிரகத்தின் இரு துருவங்களிலும் ஆழமான பள்ளங்களில் எராளமான அளவில் பனிக்கட்டிகள் காணப்படுகின்றன. இந்தப் பனிக்கட்டிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வந்து விழுந்தவை என கருதப்படுகிறது.
சூரியனைச் சமமான வட்டப்பாதையில் சுற்றாமல் நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் புதன், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையினை வெள்ளிக்கோள் போலவே தன்னுடைய மேல் பகுதிகளில் கொண்டுள்ளது.
இக்கோளில் உள்ள தனிமங்கள்
ஹைட்ரஜன் -(H) ~ 3 × 109 ~ 250
அணுத்திரள் ஹைட்ரஜன் < 3 × 1015 < 1.4 × 107 < 3 × 1011 ~ 6 × 103
ஆக்சிஜன் < 3 × 1011 ~ 4 × 104
ஆக்சிஜன் அணுக்கள்< 9 × 1014 < 2.5 × 107
சோடியம் ~ 2 × 1011 1.7-3.8 × 104
பொட்டாசியம் ~ 2 × 109 ~ 400
கால்சியம் ~ 1.1 × 108 ~ 300
மக்னீசியம் ~ 4 × 1010 ~ 7.5 × 103
ஆர்கான் ~ 1.3 × 109 < 6.6 × 106
நீர் < 1 × 1012 < 1.5 × 107
மற்றும் நியான், சிலிகான், கந்தகம், இரும்பு, கார்பன் -டை -ஆக்சைடு போன்றன புதன் கோளில் காணப்படுகின்றன.
புதன் கோளைப் போன்ற சூழ்நிலை ஹவாய் தீவுகளில் உள்ள எரிமலை வாய்களில் காணப்படுகிறது, இந்தச் சூழலில் அந்த பகுதியில் கடும் வெப்பத்தைச் சமாளித்து கந்தகத்தை உட்கொண்டு வாழ்கிறது.
இதனடிப்படையில் புதனில் கந்தகத்தை உட்கொள்ளும் பாக்டீரியங்கள் வாழ வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. புதனில் உள்ள ஒடின் பிளண்டியா (Odin Planitia) என்ற எரிமலையின் இயற்கை குணம் பூமியில் உள்ள எரிமலைகளைப் போன்று இருப்பதால் அவற்றின் முகடுகளில் பாக்டீரியங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
தூரக்கோள்களில் உயிரினம் தேடும் நமக்கு சூரியனுக்கு அருகில் உள்ள ஒரு கோளில் பாக்டீரியங்கள் உள்ள செய்தி வியப்பளிக்கும் ஒன்றுதானே. பாக்டீரியங்கள் உண்மையில் அங்கு பல்கிப் பெருகி இருக்கும் பட்சத்தில் கரிமப் பொருட்களான கச்சா எண்ணெய் இருப்பதற்கான வாய்ப்பும் மறுப்பதற்கில்லை.
இதன்படி எதிர்கால உயிரினத்திற்குத் தேவையான எரிபொருள் அடங்கிய மாபெரும் பெட்டகமாக புதன் திகழும். புதனில் மனித இனம் அறிவியல் முறைப்படி பாதுகாப்பாக வாழத் தகுந்த சூழலை உருவாக்க முடியும்.
முக்கியமாக வெள்ளியில் உள்ளது போல் மிதக்கும் நகரங்களை சூரிய வெப்பம் படும் விளிம்புகளில் அமைக்கும் திட்டம் ஒன்றை நாசாவின் மெசஞ்சர் விண்கலம் மூலம் செயல்படுத்தும் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
புதனை ஆராய அனுப்பப்பட்ட விண்கலன்கள்
1973ஆம் ஆண்டு அமெரிக்காவால் அனுப்பப்பட்ட மாரினார் 10 விண்கலம் புதன் கோளின் அடர்த்தி, அதில் உள்ள இரும்பு மற்றும் இதர தனிமங்கள் உலோகங்கள் பற்றிய தகவலை அனுப்பியது.
நாசா அனுப்பிய மெசெஞ்சர் விண்கலமும் புதனும் (ஹப்பிள் தொலைநோக்கி மூலம் எடுத்த படம்)
புதன் கோளிற்கு விண்கலத்தை அனுப்புவதில் பல சிக்கல்கள் உண்டு. பூமியானது சூரியனில் இருந்து சுமார் 15 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. புதன் சூரியனிலிருந்து வெறும் 6 கோடி கி.மீ. தெலைவில் உள்ளது. புதன் கோளிற்கு விண்கலத்தை அனுப்புவது சூரியனை நோக்கி அனுப்புவதற்குச் சமம்.
இதில் இரண்டு சிக்கல்கள் உண்டு. ஒன்று, விண்கலம் புதனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரிக்கும், வேகம் அதிகரிக்கும். இதன் காரணமாக புதன் கிரகத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக சூரியனை நோக்கிச் சென்று விண்கலம் சாம்பலாகிவிடும். புதன் கோளின் ஈர்ப்புப் பிடியில் சிக்குகிற அளவுக்கு விண்கலத்தின் வேகத்தைக் குறைத்தால்தான் விண்கலம் புதன் கிரகத்தைச் சுற்ற ஆரம்பிக்கும். வேகத்தைக் குறைப்பதுதான் பிரச்சினை.
2004 ஆகஸ்டில் அனுப்பப்பட்ட மெசஞ்சர் வினாடிக்கு 640 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தது. இதன் வேகத்தைப் படிப்படியாகக் குறைக்க புதிய வழி கையாளப்பட்டது. இதன்படி மெசஞ்சர் விண்கலம் சூரியனை ஒரு சுற்று சுற்றிவிட்டு மறு ஆண்டு ஆகஸ்டில் பூமியை நெருங்கியது. அப்போது அதன் வேகம் சற்றுக் குறைந்தது.
பின்னர் மேலும் சில சுற்றுகள் சுற்றிவிட்டு வெள்ளிக்கோளை 2006 மற்றும் 2007ஆம் ஆண்டில் கடந்து சென்றது. அதனால் மேலும் வேகம் குறைக்கப்பட்டது.
பின்னர் சூரியனை மேலும் சிலமுறை சுற்றிக்கொண்டே புதன் கோளை நெருங்கியது. 2011, மார்ச் 18ஆம் தேதி விண்கலம் புதனின் ஈர்ப்பு விசையில் நுழைந்து நிரந்தரமாகச் சுற்ற ஆரம்பித்தது. அமெரிக்க நாசா விண்வெளி அமைப்பைச் சேர்ந்த சென்வான்யென்(SENWENYEN) என்பவர்தான் மெசஞ்சர் விண்கலத்தின் பாதையைத் திட்டமிட்டுக் கொடுத்தார்.
பூமியிலிருந்து புதன் கோள் அதிகபட்சமாக 22 கோடி கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது. 2004ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட மெசஞ்சர் ஆறரை ஆண்டுகாலம் விண்ணில் அங்கும் இங்குமாக வட்டமடித்து புதனை நெருங்கிய போது அது பயணம் செய்த தூரம் 790 கோடி கிலோ மீட்டர்.
சூரியனின் அதிகமான வெப்பத்தைத் தாங்க காப்புக் கேடயம் தாயாரிக்க மட்டும் 7 ஆண்டுகள் ஆனது. மேலும் விண்கலத்தை உருவாக்கத் திட்டம், அதைச் செய்துமுடிக்க ஆன காலம், பாதை உத்திகளை உருவாக்க என சுமார் 20 ஆண்டுகள் ஆயிற்று.
புதனின் கரடு முரடான தரைத்தளமும் எரிமலைகளும்
மெசஞ்சர் விண்கலம் 363 புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் இருட்டுப் பகுதியில் டெபுசி என்று அழைக்கப்படுகிற கதிர்வீச்சு காணப்படுவதாகவும். அதன் பகல் பகுதியும், இருள்பகுதியும் சந்திக்கும் பகுதியில் ஒளிவட்டம் போன்ற வளையம் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சூரியனுக்கு மிக அருகில் அறிவியலாளர்களுக்கு கண்கட்டி வித்தை காட்டிக்கொண்டு இருந்த புதனையும் இறுதியாக அறிவியலாளர்கள் தங்கள் ஆய்வின் கீழ் கொண்டுவந்துவிட்டனர். சனி வளையம் போல் வித்தியாசமான வளையம் கொண்ட தூரக்கோள் ஒன்றும் இருக்கிறது. இக்கோளை வயோஜர் விண்கலம் தன்னுடைய பயணத்தின் போது படமெடுத்து அனுப்பியது.
இக்கோளைப் படமெடுத்து அனுப்பிய பிறகுதான் வயோஜர் விண்கலம் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறியது.
- சரவணா ராஜேந்திரன்