விண்வெளியில் ஹைட்ரஜன் ஆறு
30 தை 2014 வியாழன் 06:44 | பார்வைகள் : 10836
அமெரிக்காவின் மேற்கு விர்ஜினீயா பல்கலை கழகத்தின் விண்வெளி விஞ்ஞானி டி.ஜெ.பி. பிகானோ தலைமையிலான குழுவினர் விண்வெளியில் ஹைட்ரஜன் ஆறு போன்று ஓடுவதை கண்டு பிடித்தனர்.
அது மிகவும் மங்கலாக, மெலிதாக பரவி ஓடுகிறது.
இது விண்வெளியின் பால் மண்டலத்தில் என்.ஜி.சி. 6946 என்ற விண்மீன் கூட்டத்துக்குள் ஊடுருவி பாய்கிறது. இந்த ஹைட்ரஜன் ஆறு பூமியில் இருந்து 2 கோடியே 20 இலட்சம் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இவையே விண்மீன் கூட்டங்களை ஒன்றிணைத்து புதிய நட்சத்திரத்தை உருவாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.