அதிக காலம் காதல் செய்தால் நம்மால் அதிக காலம் வாழ முடியுமா?
2 ஆவணி 2023 புதன் 07:47 | பார்வைகள் : 5837
இங்கு காதல் என்று குறிப்பிட்டிருப்பது இரு இளைஞர்களுக்கு மத்தியில் இருப்பது மட்டுமல்ல, தள்ளாடும் வயதினிலும் இரு உறவுகளுக்கு மத்தியில் இருக்கும் ஓர் உணர்வைத் தான் காதல் என்று குறிப்பிட்டிருக்கிறோம்.
மனைவியை காதல் செய்யும் கணவனாக இருக்கட்டும், அல்லது கணவனை காதலிக்கும் மனைவியாக இருக்கட்டும். குழந்தைகளை காதலிக்கும் அப்பாவாக இருக்கட்டும், அம்மாவை நேசிக்கும் பிள்ளைகளாக இருக்கட்டும். உறவுமுறை எதுவாக இருந்தாலும் உண்மையான காதல் அவர்களை அதிக நாள் வாழ செய்யுமா? என்றால் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு ஆம் என்று தான் பதில் அளிக்கிறார்கள்.
காரணம் நீங்கள் அதிகமாக ஒருவர் மீது காதல் கொண்டு வாழ்வதனால், அடிப்படையில் உங்கள் மனம் மிக மிக அமைதியாக இருக்கும். இது உங்கள் ஆயுள் நாட்களை அதிகமாக வாய்ப்புகளை அளிக்கிறது. ஆயுள் காலத்தை நீட்டிக்கும் அதே நேரத்தில் உங்கள் கவலைகளை பெரிய அளவில் குணப்படுத்த உதவுவது உறவுகள்.
குறிப்பாக நீங்கள் ஒரு டிப்ரஷன் மனநிலையில் இருக்கும் பொழுது நீங்கள் அதீத காதல் கொண்டிருக்கும் ஒரு உறவின் மூலம் அந்த இறுக்கத்தை வெகு சுலபத்தில் விலக்கிவிட முடியும். இது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க பெருமளவு உதவும்.
கவலைகளை மறந்து நாம் சந்தோஷமாக பேசி மகிழ்ந்தாலே நம்முடைய பாதி வியாதிகள் குணமாகிவிடும் என்பார்கள். அதேபோலத்தான் நாம் காதலில் லயித்து, மெய் மறந்து இருப்பதனால் நமக்கு இருக்கும் கவலைகள் குறையும். அதே நேரம் நம்முடைய எதிர்ப்பு சக்தியும் பன்மடங்கு பெருகும்.
நம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் வலிகளை குறைக்கும் தன்மை காதலுக்கு பெரிய அளவில் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். "எல்லாத்துக்குமே மனசு தான் பா காரணம்", என்று நம் வீட்டு பெரியவர்கள் அடிக்கடி சொல்ல கேட்டிருப்போம். உண்மையில் நம் மனம் அமைதி வரும் பொழுது நம்மை நாடி அனைத்தும் வந்து விடுகிறது என்பதுதான் உண்மை.