மறந்தும் கூட இந்த விடயங்களை யாரிடமும் பகிர வேண்டாம்!
4 சித்திரை 2023 செவ்வாய் 11:58 | பார்வைகள் : 12866
எங்களை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. இரகசியங்களை பாதுகாப்பது தான் மிகப்பெரிய ஒரு விடயம். ஆனால் அதை பாதுகாத்துக் கொண்டால் பல பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு இருக்கையில் யாரிடமும் நாம் பகிரபக்கூடாத விடயங்கள் என்னவென்று பார்ப்போம்.
கடந்த காலம்
கடந்த காலத்தில் நடந்தவற்றை யாரிடமும் பகிரக் கூடாது. நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் பகிரக் கூடாது.
முக்கியமாக செய்த தவறுகள் மற்றும் பேசிய பொய் ஆகியவற்றை பகிரவே கூடாது. அவ்வாறு பகிர்ந்துக் கொண்டால் சிலர் தவறை மன்னித்து மீண்டும் திருந்தியுள்ளார் என நினைத்து கதைப்பார்கள்.
ஆனால் சிலர் அந்த தவறுகளை நினைத்து உங்களை கஷ்டப் படுத்துவார்கள். ஆகவே கடந்த காலத்தை நினைத்து கவலைப்படாமல் அடுத்து என்ன செய்ய போகின்றோம் என நினைத்து வாழ்க்கையை நகர்த்த வேண்டும்.
பலம் மற்றும் பலவீனம்
தனது பலவீனங்களை யாரிடமும் பகிரக்கூடாது. ஏனென்றால் உங்களிடம் வெற்றிப் பெற வேண்டும் என நினைக்கும் சிலர் உங்களது பலவீனத்தை வைத்து உங்களை தோல்வியடைய செய்வார்கள். அதே போல் பலத்தையும் யாரிடமும் பகிரக் கூடாது. அதுவே உங்களுக்கு எதிரியாக மாறலாம்.
ஒருவரைப் பற்றி நீங்கள் எப்படி உணருகின்றீர்கள்
மற்றவர்களை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என யாரிடமும் பகிரக் கூடாது. நம்பிக்கையானவர் என நினைத்தும் கூறக்கூடாது.
அப்படி பகிர்ந்துக் கொண்டால் சம்பந்நப்பட்டவருக்கு தெரிய வந்தால் அது உங்களுக்கே தீங்காக அமையலாம். நினைத்ததை சொல்ல வேண்டும் என்றால் சம்பத்தப்பட்டவரிடமே கூறவிட வேண்டும். அதுவே நல்லது.
உங்களுக்கு பிடிக்காதவர்கள்
உங்களுக்கு பிடிக்காதவர்களைப் பற்றி மற்றவர்களிடம் கூறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அவ்வாறு கூறினால் அவர்களுக்கு பிடித்தவர்கள் உங்களை அவமானம் செய்து விடுவார்கள். ஆகவே உங்கள் அபிப்பிராயத்தை யாரிடமும் பகிரக்கூடாது.
சம்பாதிக்கும் பணத்தின் பெறுமதி
சம்பாதிக்கும் பணம், சேமித்து வைத்து இருக்கும் பணம், எவ்வளவு நகை உள்ளது என்பது பற்றி யாரிடமும் கூறக்கூடாது.
அப்படி அவர்கள் தெரிந்துக்கொண்டதால் உங்களிடம் இருந்து அதை பறிக்க நினைப்பார்கள். அல்லது பொறாமைப்படுவார்கள். ஆகவே உங்களிடம் எவ்வளவு செல்வம் இருக்கின்றது என யாரிடமும் பகிரக்கூடாது.
காதல் வாழ்க்கை
உங்கள் இருவருக்கும் இருக்கும் சண்டைகள் மற்றும் அண்ணியோன்யம் பற்றி யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள கூடாது.
குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை வெளியே கொண்டுப் போனால் பிரச்சினை வேறு வழியாக உங்களிடம் வரும். ஆகவே உறவுகளின் மத்தியில் உள்ள பிரச்சினைகளை யாரிடமும் பகிர வேண்டாம்.
மகிழ்ச்சியான வாழ்க்கையை விளம்பரப்படுத்துதல்
தொழில்நுடபத்தின் வளர்ச்சியால் தற்போது முகநூல் மற்றும் பல வகையான சமூக வலைத்தளங்கள் வந்துள்ளது. அதில் தனது சந்தோஷம் மற்றும் துக்கத்தை பகிர்ந்து வருகின்றனர். அதை பார்த்து சிலர் பொறாமைப் படுவார்கள். பல ஆபத்தான விடயங்கள் கூட நிகழலாம். ஆகவே சமூக வலைத்தளங்களில் பகிர்வதை சற்று குறைத்துக் கொள்வது சிறந்தது.
வெவ்வேறு யோசனைகள்
உங்களுக்கு திடிரென பல வித்தியாசமான யோசனைகள் வரலாம். அதை யாரிடமும் கூறக் கூடாது. அப்படி பகிர்ந்துக் கொண்டால் அதை அவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள்.
உங்களுக்கு தோன்றிய யோசனையை வேறொருவர் நிறைவேற்றுவது உங்களுக்கு மனவுளைச்சலை தரலாம். ஆகவே சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உங்களுடைய அடுத்த திட்டம்
அடுத்து என்ன செய்ய போகின்றோம் என்பதை பகிரக் கூடாது. வெற்றிக்கான யுத்திகள், வெற்றிக்கான காரணம் ஆகியவற்றை யாரிடமும் கூறக்கூடாது.
அப்படி கூறினால் உங்களுடைய தோல்விக்கு நீங்களே திட்டத்தை வழங்குகின்றீர்கள். ஆகவே உங்களுடைய அடுத்த திட்டத்தை யாரிடமும் கூறவேண்டாம்.
இரகசியங்களை பகிரக் கூடாது
இரகசியங்களை பாதுகாக்க தெரிந்தாலே இந்த பிரபஞ்சத்தில் உங்களால் எளிமையாக வாழ முடியும்.
உங்களுக்கு ஒரு இரகசியத்தை தற்காத்து கொள்ள முடியவில்லை என்று தான் வேறோருவரிடம் கூறுகின்றீர்கள். அவர்களும் அந்த இரகசியத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடாது.