கணவன் - மனைவி அன்யோன்னியத்தை அதிகரிக்க ..
25 பங்குனி 2023 சனி 02:56 | பார்வைகள் : 10978
மனைவியுடன் ரொமான்ஸ் செய்வதற்கு நேரம் காலம் கிடையாது என்றாலும், பெரும்பாலும் மாலை மற்றும் இரவு மட்டுமே அதற்கான நேரமாக பார்க்கப்படுகிறது. உண்மையில் காலைப்பொழுதை ரொமான்ஸூடன் தொடங்கினால், அன்றைய நாள் முழுவதும் ஹேப்பியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பீர்கள். காலை நேரத்தில் நீங்கள் செய்யும் ஒரு சில விஷயங்கள் இருவருக்கும் இடையிலான அன்யோன்னியத்தை அதிகரிக்கும். உங்கள் நாள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், காலையில் நீங்கள் செய்ய வேண்டிய 5 ரொமான்ஸ் டிப்ஸ்கள் இதோ...
காலையில் கண் விழித்தவுடன் சிரித்த முகத்துடன் மனைவிடம் குட் மார்னிங் அல்லது காலை வணக்கம் என கூறுங்கள். இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. எழுந்தவுடன் ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக பார்த்து உரையாடத் தொடங்கினால், இனம் புரியாத நேர்மறை எண்ணங்கள் உங்களுக்குள் வரும். குட் மார்னிங் சொல்லும்போது ஒரு சிறிய HUG (அரவணைப்பு) கொடுங்கள். உங்களின் அரவணைப்பு மனைவிக்கு மகிழ்ச்சியை நிச்சயமாக கொடுக்கும்.
வேலையில் பங்கெடுத்தல் : காலை எழுந்தவுடன் சமையல் செய்வது முதல் குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவது வரை, அல்லது குழந்தைகளை பார்த்துக்கொண்டே மற்ற வேலைகளை செய்வது வரை, அனைத்து வேலைகளையும் பெண்களே செய்வார்கள். இது ஒருவித விரக்தி மனப்பான்மையை அவர்களுக்குள் உருவாக்கிவிடும். வேலைக்கு செல்லும் கணவனுக்கு தேவையான வேலைகளையும் செய்து கொடுப்பார்கள். இதில் இருந்து கணவனாகிய நீங்கள் அவர்களுக்கு விடை கொடுங்கள்.
அதாவது, வேலையை பிரித்துக்கொள்ளுங்கள். இருவரும் இணைந்து வேலையை செய்யும்போது ஒருவர் மீது இருக்கும் சுமை குறையும். அதேபோல், ஒரே வேலையை இருவரும் இணைந்து செய்யும்போது குறைவான நேரத்தில் அதனை முடிக்க முடியும். அப்போது, ஒருவர் மீது ஒருவருக்கான அன்பு இயல்பாக பெருகும். வேலையை இருவரும் பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் மனைவி உங்களிடம் மனம்விட்டு பேசுவார்கள். அவர்களின் எண்ண ஓட்டத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
இருவரும் ஒன்றாக குளிக்கும்போது, இருவருக்கும் இடையிலான அன்பை பெருக்கும். குளிக்கும்போது சின்ன சின்ன விளையாட்டுகள், கொஞ்சல்கள் உங்களை நீங்களே ரசிக்கும்படி இருக்கச் செய்யும். அவசர நேரத்தில் இது எல்லாம் சாத்தியமா? என யோசிப்பீர்கள். மகிழ்ச்சிக்கு நேரம், காலம் கிடையாது. மனதைப் பொறுத்து உங்களின் மகிழ்ச்சி என்பதால், கிடைக்கும் நேரங்களில் எல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்க பழகிக்கொள்ளுங்கள். மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவது என்பது உங்கள் இருவருக்குமான பிணைப்பை அதிகரிக்கும்.
கணவன், மனைவி ஒன்றாக சாப்பிடுங்கள். உங்கள் குழந்தைகள் இருந்தால் அனைவரும் ரவுண்டாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருங்கள். சாப்பிடும்போது சின்ன காமெடி, வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியாக இருங்கள். தேவையற்ற எண்ணங்களை சுமக்கும் மனது மகிழ்ச்சியான எண்ணங்களை மட்டுமே சுமக்க பழகிக்கொள்ளும்.
கல்யாணத்துக்கு நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையேயான அரவணைப்பு என்பது குறையத்தொடங்கும். குழந்தைகள் இருந்தால் சொல்ல தேவையில்லை. ஆனால், எத்தனை வருடங்கள் ஆனாலும், மனைவியை நாள்தோறும் அரவணைப்பதை நிறுத்த வேண்டாம். அன்பாக, அரவணைக்கும்போது அவர்களிடம் இருக்கும் மனக்குறைகள் எல்லாம் நொடிப்பொழுதில் வெளியேறிவிடும்.
மனைவியை அரவணைக்கும்போது, உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் பற்றிய சிந்தனைகளும் காணமல்போகும். மேலும், சின்ன சின்ன தொடுதல்கள், அதாவது கையை பற்றிக்கொள்ளுதல், கண்ணத்தை தடவுதல் ஆகியவை காலை நேரத்தில் செய்யும்போது, அன்றைய பொழுது மகிழ்ச்சியாக கடக்கும்.