Paristamil Navigation Paristamil advert login

குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு

குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு

28 மாசி 2023 செவ்வாய் 10:15 | பார்வைகள் : 6316


எந்தக் குழந்தையும்  நல்லக்குழந்தை தான்  மண்ணில் பிறக்கையிலே  நல்லவர் ஆவதும்  தீயவராவதும்  அன்னை வளர்ப்பிலே’’  என்ற   பாடலுக்கமைய  ஒரு  குழந்தையை பெற்று   அதன் ஒவ்வொரு  வளர்ச்சிப்படிநிலையிலும்  உரியவகையில்  வளர்த்தெடுக்கும்  பெரும் பொறுப்பு  தாய்கே உள்ளது என்றால்  அதை மறுப்பதற்கில்லை.  ஒரு  தாயின்  செயற்பாடுகள்,  பழக்க வழங்கங்களை வைத்தே  அவளின்  பிள்ளைகளை  மதிப்பிடுகிறார்கள்  இதுவே யதார்த்தமாகும். 

தாய் என்பவள்  இறைவனுக்கும்  மேலாக  மதிக்கப்படுகின்றார்.   காராணம்  பத்துமாதங்கள்    ஒரு குழந்தையை  கருவிலே   சுமப்பது என்பது  இலேசான  காரியமல்ல   அவ்வாறு  சுமத்து  பிரசவ வலியைத் தாங்கி ஒரு குழந்தையை  இந்து  உலகிற்கு  கொண்டுவருகிறாள்.    அத்தோடு அவளுடைய     பங்களிப்பு நிறைவுபெறுவதில்லை.     

தாய் என்ற நிலையை  அடைந்த  பெண்   பல  பொறுப்புக்களை    சுமந்துகொண்டு செயற்படவேண்டியுள்ளது.   இந்த  சமுதாயத்துக்கு  நல்லதொரு  பிரஜையை  உருவாக்கவேண்டிய  பெரும்  பொறுப்பு  தாய்க்கே  உண்டு.    

இன்று  உலகில் பலவகையான  சிக்கல்களுக்கு  பிள்ளைகள்  ஆளாகின்றார்கள்,  போதைப்பொருள் பாவனை, தவறான நபர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும்   நட்பு  என  பல பிரச்சினைகள்  இன்று  தலைவிரித்தாடுகின்றது.  அவற்றிலிருந்தெல்லாம்  தன்னுடைய    பிள்ளைகளை   கண்ணும் கருத்துமாக  பார்த்துக்கொள்ள  ஒரு தாய்   பல தியாகங்களை   செய்யவேண்டியுள்ளது.   

குழந்தைகளை  அளவுக்கதிகமாக  கண்காணித்தாலும்  அவர்கள்      அதை வேறுவிதமாக   அர்த்தப்படுத்திக்கொண்டு    தவறுகளை  செய்ய முற்படுகிறார்கள்.    

குழந்தைகளுக்கு  எப்போதும்  அன்பு செலுத்தும்  பழக்கத்தை   கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும்.   அப்போதுதான்  பிறரை நேசிக்கும்  பழக்கத்தை அவர்கள்  உருவாக்கிக்கொள்வார்கள்.  அதுவே  ஒரு நல்ல சமுதாயம்  உருவாக  வழிவகுக்கம்.  அத்தோடு பிள்ளைகளை  இன்னொரு  பிள்ளையுடன் ஒப்பிட்டு பேசுவதை  தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

ஏனெனில் ஒவ்வொரு  பிள்ளைக்கும்    வெவ்வேறு விதமான  திறமைகள்  உண்டு அதை நாம்  இனங்காணவேனுமே தவிர  ஒப்பிட்டு குறை கூறுவதை முற்றாக  தவிர்க்கவேண்டும்.  குழந்தைகளின் பன்முக வளர்ச்சியில் தாயின் பங்களிப்பே  முக்கியம்  பெறுகின்றது. 

இன்றைய போட்டி நிறைந்த  உலகில்  அநேகமான குழந்தைகளுக்கு  தாயின்  அரவணைப்பு  குறைவாகவே  கிடைக்கின்றது.   காரணம் பொருளாதார சிக்கல்கள் காரணமாக    தாய்மார் கட்டாயம்   வேலை செல்ல வேண்டிய  நிர்ப்பந்தத்துக்கு  உள்ளாகின்றார்கள்.  அதனால்   குழந்தைகளுடன்   அதிக நேரத்தை  செலவழிக்க முடியாமல் இருக்கின்றது.   இது குழந்தைகளின்  முன்னேற்றப்பாதைக்கு  சில நேரங்களில்  நேர்மறையான  விளைவுகளையும்  ஏற்படுத்திவிடும்.   எவ்வளவு வேலைப்பளு  அதிகமாக இருந்தாலும்  உங்களின்    குழந்தைகளுக்காகவும்   நேரத்தை  ஒதுக்கி  ஒருமுகப்படுத்தும் மனநிலையுடன்   குழந்தைகளுக்காக  நேரத்தை  செலவிடுங்கள்.   

பிள்ளைகள்  ஏதேனும்  ஒரு பொருளை கேட்டுக்கும் போது   அது  தேவைக்காக  கேட்கின்றதா?  அல்லது  ஆசைக்காக  கேட்கின்றதா  என்பதை புரிந்து கொண்டு  தேவைக்காக  கேட்கும் எதையும்  தாமதிக்காமல்  பெற்றுக்கொடுங்கள்.  காலத்தில் காட்டாத அன்பும்,  காலமறிந்து கண்டிக்காத செயலும் பிள்ளை வளர்ப்பில்  தாய்  நிச்சயமாக  பின்பற்றவேண்டிய விடயங்களாகும். 

எனவே ஒரு தாய்  ஒரு குழந்தைகளிடம்  காட்டும்  அக்கறையும்  அன்பும் பரிவும்,   நல்லொழுக்கமுமே  அக்குழந்தைக்கு கிடைக்கின்ற  மூலதானமாக  அமைந்து   எதிர்காலத்தில்  அந்தக் குழந்தை    நல்லதோர் பிரஜையாக  திகழ வழி வகுக்கும்  என்பதை  உணர்ந்து   ஒவ்வொரு தாய்மாரும்  தன்னுடைய   பொறுப்பிலிருந்து விலகாமல்  இருப்பதே  கட்டாயமாகும். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்