உங்கள் வாழ்க்கையை நீங்களே சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!
18 மாசி 2023 சனி 14:07 | பார்வைகள் : 29933
திருமண உறவில் பணம் ஒரு பெரிய அழுத்தம் அல்லது சிக்கலை ஏற்படுத்தலாம் குறிப்பாக தம்பதியரில் ஒருவர் மற்றவரை விட அதிகமாக செலவு செய்யும் போது பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
நம் ரிலேஷன்ஷிப்பை சிதைப்பது சில நேரங்களில் மூன்றாவது நபராக இருந்தாலும் சில நேரங்களில் நாமே நம் சொந்த பிணைப்பு சிதைய காரணமாக இருக்கிறோம். ஒரு திருமண உறவு சிக்கலை நோக்கி செல்கிறது என்பதை வெளிப்படுத்தும் பல அறிகுறிகள் உள்ளன.
ஆனால் அதே சமயம் உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்களே சிக்கலை ஏற்படுத்தி கொள்கிறீர்கள் அல்லது அழிக்கிறீர்கள் என்பதற்கான சில பொதுவான அறிகுறிகள் உள்ளன.
இவற்றை நீங்கள் தெரியாமல் செய்து கொண்டிருந்தால் அல்லது பின்பற்றினால் உங்களது திருமண வாழ்க்கை இறுதியாக முறிவை நோக்கி செல்ல கூடும். உங்களது.
திருமண வாழ்வில் நீங்களே சிக்கலை ஏற்படுத்தி கொள்கிறீர்கள் என்பதை கீழ்காணும் விஷயங்களை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்.
கம்யூனிகேஷனில் குறைபாடு : எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பிலும் தகவல் தொடர்பு முக்கியமானது. கணவன் - மனைவி உறவில் இது இன்னும் முக்கியமானது.
உங்கள் இருவருக்குள்ளுமான தகவல் தொடர்பை பராமரிப்பதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், ஒருகட்டத்தில் இதையே உங்கள் பார்ட்னரும் செய்தால் விஷயங்கள் தவறாக நடக்கின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மனைவியுடனான இயல்பான உரையாடல்களை நீங்கள் தவிர்ப்பது அல்லது தேவையான விஷயங்களை பேசுவதற்கு பதிலாக வாக்குவாதத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவை நிகழ்ந்தால் அது ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் சிக்கலின் அறிகுறியாக இருக்கலாம்.
துரோகம் அல்லது ஏமாற்றுத்தனம் : திருமண உறவை சீர்குலைப்பதில் துரோகம் அல்லது ஏமாற்று வேலை முக்கிய காரணியாக இருக்கும்.
மனைவியுடனான உங்களது உணர்வு மற்றும் உறவு இரண்டிலுமே நீங்கள் எப்போதும் நேர்மையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
இதுநாள் வரை நீங்கள் நேர்மையாக இல்லை என நீங்கள் நினைத்தால் இந்த சிக்கலை விரைவில் சரி செய்து கொள்ளுங்கள்.
நிதி சார்ந்த பிரச்சனைகள் : திருமண உறவில் பணம் ஒரு பெரிய அழுத்தம் அல்லது சிக்கலை ஏற்படுத்தலாம் குறிப்பாக தம்பதியரில் ஒருவர் மற்றவரை விட அதிகமாக செலவு செய்யும் போது செலவுகளை பற்றி உங்கள் துணையுடன் அடிக்கடி வாதிட அல்லது சண்டையிட நேர்ந்தால் இருவரும் அமைதியான முறையில் ஒன்றாக உட்கார்ந்து அத்தியாவசிய தேவைகளுக்கான செலவு குறித்து பட்ஜெட் போடலாம்.
உடல் ரீதியான நெருக்கமின்மை : திருமண உறவுகள் என்றாலே உடல் நெருக்கம் ஒரு முக்கிய அம்சமாகும். உங்கள் இருவருக்குள்ளும் நீண்ட காலமாக உடல் சார்ந்த நெருக்கம் இல்லை என்றால் உங்கள் இருவருக்குமான ரிலேஷன்ஷிப் நிச்சயம் சரியாக இல்லை என்பதை குறிக்கிறது.
உங்கள் மனைவியுடன் உடல் ரீதியான தொடர்பை நீங்கள் தொடர்ந்து தவிர்க்கிறீர்கள் என்றால் அதை யோசித்து பார்த்து என்ன சிக்கல் உங்களுக்கு என்பதை ஆராய்ந்து சரி செய்யவும்.
விமர்சனம் : அளவுக்கு அதிமாக விமர்சிப்பது மற்றும் குற்றம்சாட்டுவது ஒரு ரிலேஷன்ஷிப்பை எளிதாக சீர்குலைக்கும். நீங்கள் உங்கள் மனைவியை தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள் என்றால், திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அவர்களை குறை கூறும் பழக்கத்தை கொண்டவர் என்றால் உங்களது இந்த நடத்தையை உடனடியாக மாற்றி கொள்ளுங்கள்.
புறக்கணிப்பு : பல விஷயங்களில் உங்கள் பார்ட்னரை நீங்கள் புறக்கணிப்பவர் என்றால் இந்த பழக்கம் உங்கள் திருமண உறவை அழித்து விடும்.
துணையின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பு கொடுத்து அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பது அவர்களை உங்கள் இன்ப, துன்பங்களில் பங்கெடுக்க வைப்பது மற்றும் அவர்களது மகிழ்ச்சி மற்றும் சோகமான தருணங்களில் கைவிடாமல் நீங்கள் அவருடன் இருப்பது உள்ளிட்ட செயல்களை நீங்கள் செய்யாமல் அலட்சியம் காட்டினால் விளைவுகள் கடுமையாகவே இருக்கும். அது உங்ளின் திருமண வாழ்கையை மோசமாக்கி விடும்.
நம்பிக்கையின்மை : உங்கள் துணையின் நோக்கங்களை சரியாக தெரிந்து கொள்ளாமல் நீங்கள் தொடர்ந்து கேள்வி கேட்பது அல்லது அவர்களின் வார்த்தையை சந்தேகிப்பது போன்ற வழிகளில் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவது உங்களது திருமண உறவை கடுமையாக பாதிக்கும்.
திருமண உறவு சிக்கலாகிறது என்பதற்கான அறிகுறிகள் தான் நாம் மேற்கண்டவை என்றாலும், ஒவ்வொரு உறவும் தனித்துவமானது. பிரச்சனைகளை தீர்க்க சிறந்த வழி உங்கள் துணையுடன் வெளிப்படையாகவும் நேர்மையாக பேசி தீர்ப்பதே.