14 மாசி 2023 செவ்வாய் 17:10 | பார்வைகள் : 5675
திருமண உறவு என்பது பலவிதமான சவால்களைக் கொண்டது. பிரச்சனைகள் இல்லாத திருமணங்களே இல்லை என்று கூறலாம். ஆனால் தீர்வு இல்லாத பிரச்சனைகளும் கிடையாது. ஒரு சில பிரச்சனைகளை எளிதாக தீர்க்க முடியும் என்றாலும் சில சூழல்கள் மிகவும் கடினமாக இருக்கும். திருமணத்திற்கு முன்பான காதல், கவர்ச்சியாக, அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இதமாக தோன்றுவது, திருமணமான தம்பதிகளின் பார்வையில் வேறுவிதமாக மாறி விடுகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கூட காதலிக்கும் போது இருந்த மகிழ்ச்சியான மனநிலை அல்லது சூழலில் இருப்பதில்லை. காதலர் தின கொண்டாட்டம் திருவிழாவைப் போல கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருமணமான தம்பதிகளுக்கு காதல் எப்படி இருக்கிறது மற்றும் அவர்கள் எதிலெல்லாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
திருமணமான தம்பதிகளுக்குள் காதல் எப்படி எல்லாம் இருக்கிறது “திருமண உறவின் தொடக்க காலமான ஹனிமூன் பீரியட் என்று கூறப்படும் காலத்தில் ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான அன்பையும் காதலையும் செலுத்துவார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த கால கட்டத்தில் அவர்கள் தங்களை மற்றவரிடம் சிறப்பாக வெளிப்படுத்தி, நிறைகள் மட்டுமே தெரியுமாறு நடந்து கொள்வார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இருவருக்குமிடையே இடைவெளி அதிகமாகும்.
காதல் குறைந்து, பின் வரிசைக்கு சென்றுவிடும். இருவரில் ஒருவரோ அல்லது இரண்டு பேரும் அந்த உறவை நீடிக்க முடியாத அளவுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் அல்லது சலித்து விடும். எனவே இந்த காலகட்டத்தில் திருமணத்தைத் தாண்டிய உறவு என்ற மற்றொரு கோணம் உள்ளே வருகிறது. இந்த சமயத்தில் உறவில் நேர்மையாக இருப்பது என்பதைக் கடந்து, எப்போதும் காதலிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற கோணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது” என்று தெரிவித்தார்.
கிலீடன் என்பது திருமணத்தைத் தாண்டிய உறவைத் தேடும் ஒரு டேட்டிங் செயலி ஆகும். திருமணத்தைத் தாண்டிய உறவு அல்லது இன்னொரு காதல் என்பது வெளிநாடுகளில் சாதாரணமாக இருந்துவந்த நிலையில், சமீப காலமாக இந்தியாவிலும் அதிகரித்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதிலுமே போடப்பட்ட ஊரடங்கு இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
இந்த செயலி பயன்படுத்துபவர்களில், முதல் நிலை நகரங்களில் இருந்து 66% புதிய யூசர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாத காலத்துடன் ஒப்பிடும் போது, ஜனவரி 2023ல் யூசர்களின் எண்ணிக்கை 11% அதிகரித்துள்ளது. எனவே, இந்த செயலியில் ஊரடங்கு காலத்துக்குப் பிறகும், யூசர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியில் இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 20 லட்சம் யூசர்கள் இருக்கிறார்கள் இன்றும் உலக அளவில் இதை பயன்படுத்தும் யூசர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 20 சதவீதத்தினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆணும் பெண்ணும் ஒரு உறவில் தொடர்ந்து நீடித்திருக்க திருமணம் அவசியமாக இருக்கும் நிலையில், இதனுடைய கண்ணோட்டம் தான் பெரும் அளவில் மாறுபட்டிருக்கிறது. டிஜிட்டல் உலகில் ஒரு உறவில் கமிட் செய்வது என்பது மிகப்பெரிய ஆடம்பரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே திருமணமாகி இருந்தால் கூட, கூடுதல் விருப்பங்களை தேடி செல்லும் அளவுக்கு சூழல் மாறி இருக்கிறது.இந்த செயலி நடத்திய கணக்கெடுப்பில் 55 சதவிகித யூசர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்பது சமூகத்தால் விதிக்கப்பட்டு இருக்கிறது என்றும் அது ஒரு கடமை என்றும், 45 சதவீதத்தினர் அதை நம்புகிறார்கள், அதை பின்பற்றுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஒரு சில சூழல்களில் மட்டுமே பின்பற்ற முடியும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
உறவில் ஏற்படக்கூடிய ஒருவிதமான சலிப்பு போன்றவை இன்னொரு காதலைத் தேடிப் போவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை 63% யூசர்கள் தெரிவித்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் 20 சதவிகித யூசர்கள், கணவன் மனைவி இருவருமே இன்னொரு உறவை தேடி செல்வதற்கு பரஸ்பர சம்மதத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றும், கணவன் மனைவிக்குள் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் 10 சதவிகிதத்தினரும் மற்றொருவரை தேடி செல்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.திருமணத்தைத் தாண்டிய உறவு என்று வரும் பொழுது அது கூடுதலாக பல்வேறு சுமைகளையும் கொண்டு வரும். திருமணத்தை பாதிக்கும் மற்றும் திருமண உறவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் சாத்தியம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.