காதலர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவது எப்படி?
9 மாசி 2023 வியாழன் 13:42 | பார்வைகள் : 5886
காதலர் தினம் என்றால் காதலர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்பதில்லை. பெற்றோர்கள், குழந்தைகள், சகோதரிகள், நண்பர்கள் என யார் மீதெல்லாம் நீங்கள் உண்மையாக பாசத்தைக் காட்ட நினைக்கிறீர்களோ? அனைவருமே இந்த காதலர் தினத்தைக் கொண்டாடலாம். வெறும் வாழ்த்துக்களை மட்டும் பரிமாறிக்கொள்ளாமல் உங்களது அன்புக்குரியவர்களுக்கு தனித்துவமான பரிசுகளையும் நீங்கள் வழங்கலாம். இதோ காதலர் தின வாரம் பிப்ரவரி 7 முதல் துவங்கியுள்ள நிலையில், என்னென்ன பரிசுகளை வழங்கலாம் என்பது குறித்த சில யோசனைகள் உங்களுக்காக…
பிப்ரவரி 7 - ரோஜா தினம் : காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஜா தினம் அதாவது ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவப்பு ரோஜாக்களை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள். நீங்களும் உங்களது அன்புக்குரியவர்களுக்கு சிறந்த பரிசுகளை ரோஸ் டே வில் கொடுக்க முயற்சித்தால் ஒரு பெரிய சிவப்பு ரோஜாக்களின் பூச்செண்டை விட சிறந்தது எதுவுமில்லை. இதோடு வாழ்த்து அட்டை, பிடித்த சாக்லேட்டுகளையும் இணைத்து நீங்கள் அனுப்பலாம்.
பிப்ரவரி 8 – ப்ரபோஸ் டே : நீங்கள் உங்களது காதலை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றால் இந்த ப்ரபோஸ்டே நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்நாளில் தனித்துவமாக பரிசுகள் என்றால், உங்களது மனதில் உள்ளதை ஒரு டைரியில் எழுதிக் கொடுக்கலாம். இல்லையென்றால் டாக்கிங் டாம் போன்ற பொம்மைகளில் உங்களது காதலை ரெக்கார்டு செய்து அவர்களுக்குக் கொடுக்கலாம்.
பிப்ரவரி 9 - சாக்லேட் தினம் : சாக்லேட் தினத்தில் உங்கள் காதலை எல்லா வகையிலும் சிறப்பாக உணரச் செய்யுங்கள். விருப்பமான கையால் செய்யப்பட்ட சாக்லேட்டு பாக்ஸை பரிசளியுங்கள். இதில் தனித்துவமாக இருக்க வேண்டும் என்றால் சாக்லேட்டில் அழகான செய்திகளை எழுதி கொடுங்கள்.
பிப்ரவரி 10 - டெடி டே : டெடி டே என்பது காதலர் வாரத்தில் மிகவும் அழகான நாள். இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியான கரடி பொம்மைகளை அதாவது டெடியைப் பரிசாக அளித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நீங்கள் டெடியை மியூசிக்கல் ஆடியோ அல்லது அழகான ஹெட்ஃபோனுடன் இணைக்கலாம்..
பிப்ரவரி 11 - வாக்குறுதி நாள் (promise day) : காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பு, மனநிறைவு, மகிழ்ச்சி ஆகியவற்றை உறுதியளிக்கும் நாள் தான் ப்ராமிஸ் டே. இந்த நாளை மிகவும் அழகாக மாற்ற, உங்கள் அன்புக்குரியவருக்கு சிறந்த பரிசை வழங்கலாம். அதிக அன்பைச் சேர்க்க அவர்கள் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடிய தனிப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட நாட்குறிப்பைக்கொடுக்கவும்.. நீங்கள் கொடுத்த வாக்குறுதியைப் போலவே என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒன்றை வழங்குவதே சரியான யோசனையாக இருக்கும்.
பிப்ரவரி 12 – ஹக் டே ( Hug day) : உறவுகளுக்கிடையே உள்ள உணர்ச்சி மற்றும் அன்பை வெளிப்படுத்தும் நாளாக உள்ள ஹக் டே. நான் உனக்காக எப்போதும் இருக்கிறேன் என்ற நம்பிக்கையில் ஒருவரையொருவர் கட்டிக்கொள்ளும் போது மனநிறைவு பெறுகிறது அன்பு. இந்நாளில் நீங்கள் வாட்ச் அல்லது பர்ஸ் போன்றவற்றை அவர்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் உங்களது அன்புக்குரியவர்களிடம் நான் எப்போதும் உன்னிடம் உள்ளேன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இது அமையும்.
பிப்ரவரி 13 - முத்த நாள் (kiss day) : காதலர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பானது. உண்மையான அன்போடு கொடுக்கும் முத்தம் இருவரையும் மனதார இணைய செய்கிறது. இந்நாளில் உங்களுடன் இருக்கும் காதல் உறவுகள் நீண்ட நாளாக என்ன எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்களோ? அதை நீங்கள் பரிசாக கொடுக்கலாம். இதன் மூலம் உங்களின் புரிதல் அதிகமாகும். முத்தம் கொடுப்பதற்காக தான் இத்தினம் என்பதை மறந்து உங்களின் அன்புக்குரியவருக்கு பிடித்த மற்றும் உறவுகளை வலுப்படுத்தும் செயல்களை மேற்கொள்ளலாம்.
பிப்ரவரி 14 - காதலர் தினம் : காதலர் தின வாரத்தின் கடைசி நாள் தான் வெலன்டைன்ஸ் டே. இந்நாளில் பரிசுகள் கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும் உனக்காக நான் கடைசி வரை இருப்பேன் உறுதியளிப்பதே அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் சிறந்த பரிசாக அமையும். சிறிய பயணங்கள், பெரிதாக இல்லையென்றாலும் முடிந்த வரை சில ஆச்சரியமான விஷயங்களை அவர்களுக்காக செய்ய முயலுங்கள்.