உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் குற்ற உணர்வு பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் ...
2 மாசி 2023 வியாழன் 11:30 | பார்வைகள் : 25378
இன்றைய காலத்தில் காதல் அல்லது திருமண வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு தம்பதிகள் அடிக்கடி குற்ற உணர்ச்சிக்கு ஆளாகின்றனர். இந்த குற்ற உணர்ச்சியானது ஒருவருக்கு பல்வேறு காரணங்களினால் உண்டாகிறது. சில நேரங்களில் தங்களுடைய துணைக்கு தெரியாமல் ஏதேனும் ஒரு தவறான காரியத்தை செய்து விடுவதும், அல்லது அவர்கள் விரும்பாத ஏதேனும் ஒரு செயலை செய்வதும் நாளடைவில் மனதில் குற்ற உணர்ச்சியை அதிகரித்து விடுகிறது.
இவை மெதுவாக அவரது மனநிலையில் மாற்றத்தை உண்டாக்கி மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். இதன் காரணமாக அதிக அளவில் மன அழுத்தங்கள் உண்டாவது முதல் உறவிலும் விரிசல்கள் ஏற்படுவது வரை பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த கூடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இது போன்ற பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கு சில எளிய வழிமுறைகளை உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதைப் பற்றி பேசிய உளவியல் நிபுணர் டேவிட் என்பவர் கூறுகையில், ஆம்னி போட்டென்ட் ரெஸ்பான்சிபிலிட்டி மற்றும் கில்ட் ஃபீலிங், அதாவது அதிக அளவிலான பொறுப்புகள் மற்றும் குற்ற உணர்ச்சிகள் தான் இன்று உறவுகளில் அதிக விரிசலை உண்டாக்குகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
இதைப் பற்றி பேசிய பேராசிரியர் சூசன் கிராஸ் என்பவர் கூறுகையில், இந்த அதிக அளவிலான பொறுப்புகள் என்பது ஒரு தனிநபர், தன்னுடைய துணை அல்லது மற்றொருவரின் பிரச்சனைகளை சரி செய்யும் பொறுப்பை தனது தலையில் சுமத்திக் கொள்ளும் போது உண்டாகும் ஒரு பிரச்சனை என குறிப்பிடுகிறார். முக்கியமாக தனக்கு மிகவும் அன்பான ஒருவரின் பிரச்சனையை சரி செய்யும் பொருட்டு, மற்றொரு நபர் அந்த பிரச்சனையை தனது மனதிற்குள் போட்டு குடைந்து, எவ்வாறு தனது துணையை நல்வழிப்படுத்துவது என்று தனக்குத்தானே அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தி கொள்கிறார். இது நாளடைவில் உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது என கூறுகிறார்.