வாழ்க்கை துணையை தேடுவதற்கு உடல் பருமன் தடையாக இருக்கிறதா..? அதிர்ச்சி தரும் ஆய்வு..!
28 தை 2023 சனி 16:25 | பார்வைகள் : 5962
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது அனைவரையும் பெரிய அளவில் பாதித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுள் ஒன்று. உடல் பருமன் ஏற்படுவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. அதே சமயத்தில் தற்போது உடல் பருமனினால் வேறொரு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.
உடல் பருமனால் காதல் வாழ்க்கையிலும், தங்களுக்கான ஜோடியை தேர்வு செய்வதிலும் சிக்கல்கள் அனுபவித்ததாக கூறியுள்ளனர். ஒருவேளை நீங்கள் உங்களுடைய அதிகப்படியான உடல் எடையை குறைத்தாலுமே இழந்த மனோதிடத்தை மீண்டும் பெறுவது என்பது சவாலான விஷயமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளம் முழுவதும் சூப்பர் மாடல்களின் புகைப்படங்கள் நிரம்பி உள்ளது. அவர்களோடு போட்டி போடும் வகையில் பல்வேறு இளம் வயதினரும் பிட்டாக இருப்பதற்காக பல்வேறு வித ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். 20 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 33 சதவீத இளம் வயதினர் ஃபிட்டாக இருப்பது ஒன்றுதான் தமக்கான ஜோடியை தேர்ந்தெடுக்க ஒரே வழி என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆன்லைன் டேட்டிங் என்பது அதிகரித்து விட்ட இன்றைய நிலையில் 45 சதவீத பெண்கள் அதிக அளவில் உடல் பருமனை பற்றி தங்களுக்கு ஏதும் கவலை இல்லை எனவும், ஒரு நபரின் உடலை விட அவரின் குணம் தான் முக்கியம் எனவும் கூறியுள்ளனர்.
23 முதல் 26 வயதுக்குட்பட்ட நபர்களில் 21% பேர் தன்னுடைய துணை மிகவும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளனர். உடல் பருமன் என்பதை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடல் பருமனால் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடிய சில பிரச்சனைகள் உண்டாக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தகுதிகள் : டேட்டிங்கை பொறுத்த வரை உங்களது தகுதியை பொறுத்து உங்களுக்கான துணை தேர்ந்தெடுப்பது அமையும். அதிக அளவு தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் போது உங்களுக்கான துணையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அதிகமாகிறது. என்னதான் அனைவரும் அழகானவர்கள் என்று பலரும் கூறிக் கொண்டாலும் டேட்டிங் என்று வரும்போது உடல் பருமன் இல்லாமல் ஃபிட்டாக இருக்கும் நபர்களையே பலர் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
ஆண் பெண் இருவருமே பிரச்சனைகளை சந்திகின்றனர் : உடல் பருமனை பொறுத்தவரை ஆண் பெண் என இருவருக்குமே இதைப்பற்றிய பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கிறது. 28 வயதுக்கு மேற்பட்ட 28% ஆண்கள் தங்களுடைய உடல் எடையால் பலரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதுபோலவே 25லிருந்து 30 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 31% பேர் தங்களுக்கான துணையை தேர்ந்தெடுக்க சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் டேட்டிங் வசதி : சர்வேயில் பங்கெடுத்த 47 சதவீதம் நபர்கள் நேரடியாக வரனை தேர்ந்தெடுப்பதை விட டேட்டிங் ஆப்ஸ் மூலம் சமூக வலைத்தளங்கள் மூலமும் தங்களுக்கான துணையை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறியுள்ளனர். அதில் 21 முதல் 28 வயதுடைய 28% பேர் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஆன்லைன் டேங்கில் உங்கள் உருவத்தை பற்றி பார்த்து எடை போடுவதற்கு முன்னதாக உங்களுடைய குணநலன்களை பற்றி உங்களால் பேசி புரிந்து கொள்ள முடியும். இருவருக்கும் பிடித்து விட்டதெனில் உடல் பருமன் பற்றிய பிரச்சனையை பின்னர் பேசி புரிய வைத்து முடிவு செய்து கொள்ளலாம். மேலும் ஒருவரின் எண்ணத்தை பற்றி மற்றொருவர் அறிவதற்கும் இது வசதியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.