Paristamil Navigation Paristamil advert login

பாடசாலைகளில் அபாயா தடை - அனுமதி அளித்தது அரச ஆலோசனை அமைப்பு

பாடசாலைகளில் அபாயா தடை - அனுமதி அளித்தது அரச ஆலோசனை அமைப்பு

7 புரட்டாசி 2023 வியாழன் 17:21 | பார்வைகள் : 7740


இஸ்லாமிய கலாச்சார உடையான அபாயாவினை பாடசாலைகளில் அணிவதற்குகல்வி அமைச்சர் Gabriel Attal தடை விதித்துள்ள நிலையில், இந்த தடைக்கு அரசஆலோசனை அமைப்பு (Conseil d'État)  ஒப்புதல் அளித்துள்ளது. 

 

அரசாங்கத்துக்கான ஆலோசனை வழங்கும் அமைப்பாக இயங்கிவரும் Conseil d'État சபையில், மேற்படி அபாயா தடை தொடர்பான விவாதம் முன்வைக்கப்பட்டு, ஆலோசிக்கப்பட்டது. அதன் முடிவிலேயே இன்று வியாழக்கிழமை ‘அபாயா மீதானதடையை ஏற்றுக்கொள்வதாக’ அறிவித்துள்ளது. 

 

“இந்த ஆடைகளை அணிவதற்கான தடை அடிப்படை சுதந்திரத்தின் மீதானதீவிரமான மற்றும் வெளிப்படையான சட்டவிரோத தாக்குதலாக இல்லை எனநீதிபதி கருதுகின்றார்!” என அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்குறிப்பிட்டுள்ளனர்.

 

கடந்த 2004 ஆம் ஆண்டு பிரான்சில் இயற்றப்பட்ட‘பாடசாலைகளில்மதச்சார்பின்மையை உறுதி செய்தல்’ தொடர்பான சட்டம் விவாதிக்கப்பட்டதுடன், அபாயா உடையினை ‘அத அடையளம்’ என கருதுவதாகவும் அவ் அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்