Paristamil Navigation Paristamil advert login

பாப்பரசர் வருகையின் போது வீதி தடையை ஏற்படுத்த தயாராகும் மகிழுந்துசாரதிகள்

பாப்பரசர் வருகையின் போது வீதி தடையை ஏற்படுத்த தயாராகும் மகிழுந்துசாரதிகள்

7 புரட்டாசி 2023 வியாழன் 18:07 | பார்வைகள் : 4679


இம்மாத இறுதியில் பாப்பரசர் பிரான்சின் மார்செய் நகருக்கு வருகை தரதிட்டமிட்டுள்ளார். அன்றைய நாளின் போது மகிழுந்து சாரதிகள் ஆர்ப்பாட்டம்ஒன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளார்கள். 

 

வரும் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பாப்பரசர் Marseille நகருக்குபாப்பரசர் வருகை தர உள்ளார். அதன்போது அங்கு பணியாற்றும் வாடகைமகிழுந்து சாரதிகள், தங்களது மகிழுந்துகளை வீதியில் நிறுத்தி போக்குவரத்துதடையினை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளாது.

 

மார்செய் நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் வாடகை மகிழுந்து சாரதிகள், தங்களுடைய வருவாய் போதவில்லை எனவும், குறைந்த கட்டணங்களை அரசுநிர்ணயம் செய்துள்ளது எனவும் குற்றம் சாட்டும் அவர்கள், பாப்பரசர் வருகையின்போது வீதியினை முடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகஅறிவித்துள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்