Paristamil Navigation Paristamil advert login

மாணவனுக்கு கத்திக்குத்து தாக்குதல் - நான்கு மாணவர்கள் கைது

மாணவனுக்கு கத்திக்குத்து தாக்குதல் - நான்கு மாணவர்கள் கைது

7 புரட்டாசி 2023 வியாழன் 18:19 | பார்வைகள் : 10089


17 வயதுடைய மாணவன் ஒருவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய அதேவயதுடைய நாவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இச்சம்பவம் Châlons-en-Champagne (Marne) நகரில் உள்ள lycée polyvalent Jean-Talon லீசே  (உயர்கல்வி பாடசாலை) அருகே திங்கட்கிழமை காலைஇடம்பெற்றுள்ளது. காலை 8 மணி அளவில் பாடசாலைக்கு அருகே குறித்தமாணவனைச் சுற்றி வளைத்த நால்வர் கொண்ட மாணவர்கள் குழு, தாக்குதலைமேற்கொண்டனர். 

 

மாணவனின் தொடையில் கத்தியால் ஏழு தடவைகள் குத்தப்பட்டுதாக்கப்பட்டுள்ளான். 

 

தாக்குதலை மேற்கொண்ட 16 மற்றும் 17 வயதுடைய நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்