உக்ரைன் நாட்டுக்கு உதவும் அமெரிக்கா - ரஷ்யா கண்டனம்
8 புரட்டாசி 2023 வெள்ளி 07:34 | பார்வைகள் : 12690
உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கிடையிலான போர் பல மாதங்களை கடந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் ஒரு சில நாடுகள் உக்ரைன் நாட்டுக்கு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் உக்ரைனுக்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனின் உக்ரைன் தலைநகருக்கான விஜயத்தின் போது வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க முடிவுசெய்துள்ள 31எம்1 ஏ1 ஏபிரகாம் டாங்கிகளில் பயன்படுத்துவதற்கு 120 எம்எம் யுரேனியம் எறிகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ளது.
உக்ரைனுக்கு பிளிங்கென் 2 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் இவ் விஜயம் இடம்பெறுகின்றது.
மேலும் பிளிங்கென் போரில் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேவேளை உக்ரைனுக்கு அமெரிக்கா யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்கும் நடவடிக்கைக்கு ரஷ்யா கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan