Paristamil Navigation Paristamil advert login

அபாயா தடை - ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் கைது

அபாயா தடை - ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் கைது

8 புரட்டாசி 2023 வெள்ளி 07:44 | பார்வைகள் : 6341


பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடையான அபாயா அணிய தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்..

Clermont-Ferrand நகரில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. அங்குள்ள Ambroise-Brugière எனும் உயர்கல்விபாடசாலையில் பயிலும் மாணவி ஒருவர் அபாயா அணிந்து சென்ற நிலையில், அபாயா ஆடையினை அகற்றும் படி பாடசாலை நிர்வாகம்  கோரியுள்ளது. அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததை அடுத்து. அவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

அதயடுத்து, சில நிமிடங்களில் குறித்த மாணவியின் தந்தை பாடசாலைக்கு தொலைபேசி மூலம் அழைப்பு எடுத்துள்ளார்.  பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு தொலைபேசியூடான கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்..

இச்சம்பவம் இடம்பெற்ற சிலமணிநேரங்களில் அச்சுறுத்தல் விடுத்த குறித்த மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்