Paristamil Navigation Paristamil advert login

அகதிகள் குடியேற்றம் இரண்டு மடங்காக அதிகரிப்பு - பிரெஞ்சு மக்கள் எதிர்ப்பு

அகதிகள் குடியேற்றம் இரண்டு மடங்காக அதிகரிப்பு - பிரெஞ்சு மக்கள் எதிர்ப்பு

8 புரட்டாசி 2023 வெள்ளி 12:09 | பார்வைகள் : 7135


கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்சில் குடியேறியுள்ள அகதிகளின் எண்ணிக்கைஇரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அகதிகள் தொடர்பான அரசாங்கத்தின்நிலைப்பாட்டுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஆய்வு ஒன்றில் 64% சதவீதமானமக்கள் (பத்தில் ஆறுபேருக்கும் அதிகமானவர்கள்) இந்த அதிகப்படியானஅகதிகள் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 1968 ஆம் ஆண்டுகணக்கெடுக்கப்பட்டதன் படி பிரான்சில் 6.5% சதவீதமானவர்கள் அகதிகளாகஇருந்தனர். 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10.3% சதவீதமாகஅதிகரித்துள்ளது. 

 

இந்த அகதிகளில் 48.2% சதவீதமானவர்கள் ஆப்பிரிக்க நாடுகளைச்சேர்ந்தவர்கள் எனவும், 32.3 % சதவீதமானவர்கள் ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்தவர்கள் எனவும், மீதமானவர்களே ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அகதிகள் குடியேற்ற விடயத்தில் அரசு மேலும் இறுக்கமாக செயற்படவேண்டும்எனவும், அகதிகள் குடியேற்றத்தை அரசு நிறுத்த வேண்டும் எனவும் 64% சதவீதமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

அதேவேளை, அகதிகள் குடியேற்ற விடயத்தில் மாற்றங்கள் எதையும்செய்யத்தேவையில்லை என 36%  சதவீதமான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

 

*இந்த கருத்துக்கணிப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,017 பேர்கலந்துகொண்டிருந்தனர். செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில்இணையமூடாக இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்