முதல் இரவில் ஏன் பால் குடிக்க வேண்டும்?
26 ஐப்பசி 2021 செவ்வாய் 13:15 | பார்வைகள் : 9141
திருமணங்களில் பலவிதமான பாரம்பரிய முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் பொதுவான ஒன்று முதலிரவு அன்று மணமகள் ஒரு கிளாஸ் பால் கொண்டு வருவது. முதலிரவில் பால் குடிப்பது பாரம்பரியம் மட்டுமல்ல. அதில் சேர்க்கப்படும் குங்கமப்பூ, மஞ்சள், சர்க்கரை, மிளகு, பாதம் மற்றும் பெருஞ்சீரகம் போன்றவற்றால் சில நன்மைகளும் ஏற்படும்.
மகிழ்ச்சி : மேற்கிந்திய நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் முதலிரவின் போது புதுமண தம்பதிகள் முதல் இரவில் நெருக்கமான உறவை மேற்கொள்கின்றனர். இது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். பாலில் சேர்க்கப்படும் குங்குமப்பூ மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்கும். அதில் உள்ள எண்டோர்பின் ஹேப்பி ஹார்மோனை வெளியிட உதவுகிறது.
ஆற்றல் : பால், சர்க்கரையுடன் இணையும் போது அது அனைத்து சத்துகளும் கொண்ட சிறந்த பானமாக மாறும். எனவே நீண்ட திருமண சங்கடங்களுக்கு பிறகு களைப்பாக இருக்கும் புதுமணத் தம்பதிகள் முதல் இரவில் ஆற்றல் உடன் இருக்க பால் உதவும்.
நோய் எதிர்ப்பு சக்கதி : மஞ்சள் மற்றும் மிளகு நிறைந்த முதல் இரவு பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது முதல் இரவின் மிகவும் அவசியமான ஒன்றாகும். நீங்கள் முதன் முதலில் ஒரு நபருடன் உடலுறவு கொள்ளும் போது நோய்தொற்றின் ஆபத்து அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள் பால் இங்கு பயனுள்ளதாக இருக்கும்.
பாலியல் தூண்டுதல் : பால் பொதுவாக ஒரு சூடான பானம். இதனுடன் நொறுக்கப்பட்ட மிளகு மற்றும் பாதாம் போன்றவை சேர்க்கப்பட்டு கொதிக்க வைக்கப்படும் போது இந்த இரண்டும் சேர்ந்து பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க உதவும் இரசாயன சேர்மங்களை வெளியிடுகின்றன.
மனஅமைதி : முதலிரவு என்பது மணமகன் மற்றும் மணமகளுக்கு வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நிகழ்வு. புதுமண தம்பதிகளில் மனவாழ்க்கையின் தொடக்கமே சிறப்பாக இருப்பதற்கு பால் குடிக்கும் மன அமைதியை மேலும் வலுப்படுத்தும்.
ஒரு கிளாஸ் மசாலா கலந்த பால் முதல் இரவில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் குடிப்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க ஒரு சிறந்த வழியாகும்.