செக்ஸ் பற்றி ஒருநொடிக்கு 7 முறை யோசிக்கிறோமா? அலற வைக்கும் ரிப்போர்ட்!
30 புரட்டாசி 2021 வியாழன் 12:21 | பார்வைகள் : 9299
பெண்களைவிட ஆண்கள் அதிகளவு செக்ஸ் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் ஒரு வினாடிக்கு 7 முறை சிந்திப்பார்கள் என்பதுபோன்ற பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. சில பல்கலைக்கழகங்களே இதுபோன்ற முடிவுகளை வெளியிடும்போது பொதுமக்களும் இதை நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஒருவேளை ஒரு சாதாரண ஆண் தனது ஒருநாளில் செக்ஸ் பற்றி ஒரு வினாடிக்கு 7 முறை யோசித்தால் அவர் ஒருமணி நேரத்திற்கு 514 முறை சிந்தித்துவிட்டார் என்று அர்த்தம். அதேபோல 1 நாளில் 7,200 முறை நினைத்துவிட்டார் என்று அர்த்தம். உண்மையில் அப்படி நடக்கிறதா என்றால் எந்த ஒரு மனிதனாலும் இது இயலாத காரியமாகவே தோன்றுகிறது.
இதுகுறித்து அறிவியல் முறையில் முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நைஜீரியாவில் உள்ள ஒகோயோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ஃபிஷர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
இதற்காக அவர் தேர்ந்தெடுத்த முறை தரவுகளை சேகரித்தல். அதாவது EXPerience Sampling எனப்படும் பொதுமக்களின் மனநிலையை தெரிந்துகொள்ளும் வகையில் டேட்டாவை சேகரிப்பது. இதற்காக அவர்களிடம் பொத்தானை அழுத்தும் முறையில் அமைந்த Clicker எனப்படும் ஒரு கருவியைக் கொடுத்திருந்தார்.
இந்தக் கருவியை 3 குழுக்களாக பிரிக்கப்பட்ட 283 கல்லூரி மாணவர்களிடம் வழங்கினார். இதனால் அந்த மாணவர் செக்ஸை பற்றி நினைக்கும் போதெல்லாம் அந்த கருவியில் உள்ள ஒரு பொத்தானை அழுத்த வேண்டியிருக்கும். அதேபோல உணவைப் பற்றியும் தூக்கத்தைப் பற்றியும் அந்த நபர் யோசித்தாலும் அந்த நேரத்திலும் கருவியை அழுத்த வேண்டும். ஆக சோதனை கருவியில் செக்ஸ், உணவு, உறக்கம் எனும் 3 ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படி சேகரிக்கப்பட்ட டேட்டாக்களை ஆய்வுசெய்த ஃபிஷர் ஒரு நபர் ஒருநாளில் வெறும் 19 முறை மட்டுமே செக்ஸ் பற்றி சிந்திக்கிறார் எனத் தனது முடிவை வெளியிட்டு இருந்தார். இந்த டேட்டா சேகரிப்பில் ஒருநபர் தான் ஒருமுறை மட்டுமே செக்ஸை பற்றி நினைத்ததாக கருத்துப் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு மாறாக இன்னொரு நபர் ஒருநாளில் 388 முறை செக்ஸைப் பற்றிச் சிந்திப்பதாகத் தெரிவித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இத்தகைய ஆய்வு சேகரிப்பில் இன்னொரு சிக்கல் இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது சோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு மாதிரி (ஒருநபர்) தனது செக்ஸ் ஆசைகளைப் பற்றி வெளியே சொல்ல வெட்கப்படலாம். இதனால் வில்ஹெல்ம் ஹஃப்மேன் எனப்படும் பேராசியரை வைத்து ஜெர்மனியில் இன்னொரு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
அந்த சோதனை முறைக்கு வெறுமனே செல்போன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதாவது ஒருநபரின் செல்போனுக்கு ஒருநாளில் பல தடவை அலாரம் அடிக்கும்படி ஒரு செயலி டவுன்லோடு செய்யப்பட்டு இருக்கும். இந்த அலாரம் அடித்தவுடன் சோதனைக்கு உள்ளாகும் நபர் தான் என்ன நினைக்கிறோம் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். இதிலும் செக்ஸ், உணவு, உறக்கம் என எதை தேர்வு செய்கிறாரோ அதுவே விடையாக எடுத்துக் கொள்ளப்படும்.
இப்படி செய்யப்பட்ட ஆய்விலும் ஒருநபர் ஒரு வினாடிக்கு 7 முறை செக்ஸ் பற்றி யோசிக்கிறார் என்ற கூற்று பொய்த்துப்போனது. மேலும் ஃபிஷர் செய்த ஆய்வுகளில் பெரும்பாலும் ஆண்கள் உணவு மற்றும் உறக்கத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இருந்தனர். ஆண்கள் ஒருநாளில் 19 முறை செக்ஸ் பற்றி சிந்திப்பதைப் போலவே பெண்கள் 10 முறை சிந்திக்கிறார்கள் என்றும் முடிவு கூறப்பட்டது.
இதனால் ஒருநபர் ஒரு நொடிக்கு 7 முறை செக்ஸ் பற்றி சிந்திக்கிறார் என்று இதுவரை கூறிவந்தது கட்டுக்கதை என்பது தெளிவாகிறது. மேலும் ஆண்கள் உணவு மற்றும் உறக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவே தனிப்பட்ட சுகாதாரம், மாலைநேர காபி, டிவி, விளையாட்டு போன்ற விஷயங்களுக்கும் முக்கியத்தும் கொடுத்திருந்தார்களாம்.
ஒகோயா பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வு ஓரளவிற்கு நிம்மதியான முடிவை தந்திருக்கிறது. ஆனால் இந்த டேட்டா சேகரிப்பில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் போவது, கூச்சம், மறைக்க வேண்டும் என்ற எண்ணம் என்பதுபோன்று ஆய்வில் சொதப்பக் கூடிய பல விஷயங்கள் அடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.