வாரம் ஒருமுறையாவது உடலுறவு வைத்துக்கொள்வது அவசியம்.. ஏன் தெரியுமா ?
22 புரட்டாசி 2021 புதன் 11:57 | பார்வைகள் : 8858
ஒருவரின் பிறப்பும் , இறப்பும் அவரவர் கையில் இல்லை என்றாலும், நாம் வாழும் வாழ்க்கை முறை நம்முடைய கையில் தான் உள்ளது. அதற்கேற்ப அறிவியல் கூற்றுப்படி, ஒரு சில ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவது நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் நீண்ட நாள் வாழ்வதற்கு உறுதுணையாக அமையும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுவது என்பது நாம் அனைவரும் அறிந்த பொதுவான விஷயங்களாகும்.
இந்த பட்டியலை தவிர்த்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள அடிக்கடி உடலுறவு கொள்வது என்பது சிறந்த வழிமுறையாக ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். அடிக்கடி உடலுறவு வைத்து கொள்ளும் போது மனஅழுத்தம் குறைகிறது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, முதுமையில் நோய் வருவதை தடுக்கிறது, நீண்ட ஆயுளைக் தருகிறது.
இதய நோயும் உடலுறவும்.: செக்ஸ் இதயத்தை வலுப்படுத்துகிறது. இன்றைய நவீன கால கட்டத்தில் இதய நோய்க்கு உலகில் பெரும்பாலோனோர் பாதிக்கப்படுகின்றனர். இவை மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது பற்றி இங்கிலாந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின் படி, ஒரு மாதத்திற்கு ஒரு முறை உடலுறவு வைத்து கொள்ளும் நபர்களை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் உடலுறவு வைத்து கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு வருவது குறைவாக உள்ளது. இந்த ஆய்வானது, 65 வயதிற்குட்பட்ட 1,120 ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம்: மன அழுத்தத்தில் இருக்கும் உங்க பார்ட்னரை சமாளிக்க செக்ஸ் ஒரு சிறந்த கருவியாக செயல்படும். தம்பதிகளின் மன அழுத்தத்தை குறைக்க செக்ஸ் பயன்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கு காரணம் ஆக்ஸிடோசின் என்ற சந்தோஷ ஹார்மோன் தான். இந்த ஹார்மோன் தான் காதல், காம உணர்விற்கு காரணமாக அமைகிறது. எனவே இந்த ஹார்மோன் சுரக்கும் போது மன அழுத்தம் நீங்கி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
நோயெதிர்ப்பு சக்தி: அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்ளும் தம்பதிகளுக்கு நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கும் இம்பியூன்ளோபூலின் A என்ற ஆன்டிபாடிகள் அதிகரிக்கின்றனவாம். இதன் மூலம் உங்களுக்கு வரும் காய்ச்சல், சளித் தொல்லை போன்ற தொற்று நோயிலிருந்து காக்கிறது.
இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது: உடலுறவின் போது இதயத் துடிப்பு அதிகரிப்பதால் இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் உயிரணுக்களுக்கு புதிய இரத்தம் கிடைக்கிறது. நச்சுகளும் வெளியேறுகின்றன. இதனால்தான் நீங்கள் முழுமையான உடலுறவுக்குப் பின் ஃபிரெஷாக உணர்வீர்கள்.
ஈஸ்ட்ரோஜன் & டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பு: செக்ஸின் போது ஆண் ஹார்மோன் ஆன டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது. இது உங்கள் தசைகள் மற்றும் எலும்பிற்கு வலிமையை தருகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண்ணிற்கு உடல் வாசனையை கொடுக்கிறது. இதனால் செக்ஸில் நாட்டமும் அதிகரிக்கும்.
அடிக்கடி செக்ஸில் ஈடுபடலாமா ?... அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்வதை பற்றி ஆய்வு கூறுவது என்னவென்றால், மாரடைப்பினால் பலியானவர்களில் ஒரு வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு வைத்து கொள்பவர்கள் 27 சதவீதத்திற்கும் குறைவாகவும், ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உடலுறவு வைத்து கொண்டவர்களில் 37 சதவீதத்திற்கு அதிகமாகவும், அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்களில் 8 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்ளும் நபர்கள் நீண்ட ஆயுளோடு இளமையாகவும் வாழ்கின்றனராம்.
மற்ற ஆய்வுகள் சொல்வதென்ன.?சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், பாலியல் செயல்பாடுகளின் குறைந்த ஈடுபாடு கொண்ட ஆண்களுக்கு, இருதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் பரிந்துரைத்தது. இவை மட்டுமின்றி, அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதியினருக்கு, அந்த நாள் குதூகலமாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது உடனே மன அழுத்தத்தை போக்கி நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவுகிறதாம்.
உடலுறவு என்பது இரு தனி நபர்களை உடலளவில் மட்டும் இணைக்கும் விஷயம் அல்ல, உடலை தாண்டி மனதையும் இணைக்கும் விஷயம். மனிதர்களை பொருத்தமட்டில் உடலுறவு என்பது இன்பம் பயக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அது இரு உள்ளங்களை இணைக்கும் விஷயம் என்பது உன்மை. அதோடு மேற்கண்ட நன்மைகளை ஒருவர் அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது அனுபவிப்பதாக ஆய்வுகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.