உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..?
5 பங்குனி 2022 சனி 13:19 | பார்வைகள் : 9510
எல்லா உறவுகளுமே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. திருமணமான ஜோடிகளுக்கும் இது பொருந்தும். அது மட்டுமின்றி திருமணம் என்றாலே வாக்குவாதங்கள், முரண்பாடுகள், எதிர்மறையான கருத்துக்கள் என்று அவ்வப்போது பலவித பிரச்சனைகள் தலை தூக்கும். ஆனால் எவ்வளவு சண்டை போட்டாலும் வாக்குவாதங்கள் நிகழ்ந்தாலும் வெளிப்படையாக ஒருவருக்கொருவர் தாங்கள் நினைப்பதை தெரியப்படுத்துவது, திருமண உறவை நீடிக்கும்.
தங்களுடைய கருத்தை தெரிவிக்காமல், ஒருவருடன் ஒருவர் பேசாமல், எந்த உரையாடலும் இல்லாத தம்பதிகளுக்கு நாளடைவில் திருமண வாழ்வில் ஈடுபாடு குறைந்து விடும். மற்றவர்களின் உணர்வைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். கணவன் அல்லது மனைவி மீது ஒரு வெறுமை மற்றும் மகிழ்ச்சி இல்லாத ஒரு நிலையை உருவாக்கும். இந்த நிலை திருமண உறவில் விரிசலை ஏற்படுத்தி பிரிவுக்கும் வழிவகுக்கும்.
மகிழ்ச்சி இல்லாத திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் முக்கியமான விஷயங்கள் இங்கே...
எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பது
எப்போதாவது ஏதாவது தவறு செய்யும் பொழுது, அது தவறு இதே போல செய்யக் கூடாது என்று கணவர் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அவர்களின் தவறை சுட்டிக்காட்டுவது நியாயம். ஆனால், எதை செய்தாலுமே அதில் குறை சொல்வது அல்லது எப்போதுமே குறை சொல்லிக்கொண்டே இருப்பது என்பது மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வின் ஒரு வெளிப்பாடாகும்.
சுயநலமாக நடந்து கொள்வது
எனக்கு வந்தால் ரத்தம் உனக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற என்று கூறுவது போல எனக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு ஒரு நியாயம் என்று மிகவும் சுயநலமாக நடந்து கொள்வது. ஒரு சில கருத்து வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் ஏற்படும் பொழுது அதை ஆரோக்கியமாக விவாதித்து, தெளிவாக பேசினால் சில விஷயங்களுக்கு எளிதாகவே தீர்வு கிடைத்துவிடும். ஆனால் அதை செய்யாமல் தாங்கள் தான் சொல்வதுதான் சரி இன்று இருவருமே பிடிவாதமாக இருப்பார்கள்.
நக்கல் மற்றும் நையாண்டி செய்வது
நகைச்சுவை உணர்வு இருப்பது அவசியம். ஆரோக்கியமான நகைச்சுவை, கடினமான சூழ்நிலைகளை எளிதாக மாற்றும் மேஜிக் ஆகும். ஆனால், திருமணத்தில் வெறுப்பாக, மகிழ்ச்சியாக உணராதவர்கள் எப்போதுமே நக்கல் மற்றும் நையாண்டி செய்யும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இதனால் உங்கள் பார்ட்னர் காயப்படுவார்கள்.
‘நான் தான் சரி’ என்ற தற்காப்பு
டிவென்சிவ் மோடு என்று கூறப்படும் தான் செய்த செயல் தான் சரி என்று எப்போதுமே தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் மனநிலை தனது பார்ட்னர் மீது தான் தவறு என்பதை பெரிதாகக் கட்டும் முயற்சி. திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இல்லாதவர்கள் தன்னை எப்போதுமே டிவென்சிவ் மோடில் வைத்துக் கொள்வார்கள்.