Paristamil Navigation Paristamil advert login

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

5 கார்த்திகை 2020 வியாழன் 10:52 | பார்வைகள் : 12042


 இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப்போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.

 
ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக் கிடையே உள்ள மையப்பகுதி அகிய எட்டு இடங்கள் தான் அவை.
 
 
இவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்தமிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ்நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறார்.
 
ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவது போல நடிக்கிறாள். ஆசையோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவளிடம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கிறான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.
 
இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசிக்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சிகளில் லயித்திருக்கும் போது காதலன் அவளை நெருங்கி குனிந்து கை விரல்களையோ, கால் விரல்களையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங்குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்