Paristamil Navigation Paristamil advert login

இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!

இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!

20 மாசி 2020 வியாழன் 14:10 | பார்வைகள் : 11779


 ஆண்களின் எதிர்பார்ப்புகள் வெறும் உடல் சார்ந்ததாக மட்டுமே சித்தரிக்கப்படுகிறது, ஆனால் பெண்களை விட ஆண்களே அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதே உண்மை. உடல் ஈர்ப்பைக் காட்டிலும் ஒரு பெண் உணர்ச்சிரீதியாக ஒரு ஆணை ஈர்க்கத் தொடங்கும்போது அவனின் காதல் எல்லைகள் அற்றதாக மாறும். ஆண்களை உணர்ச்சிரீதியாக கவர பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை, பெண்களின் சின்ன சின்ன செயல்கள் கூட அவர்களை ஆயுள் முழுவதும் பெண்ணின் அன்பிற்கு அடிமையாக மாற்றும். சிறந்த காதலியாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய மற்றும் எளிதில் செய்யக்கூடிய சின்ன சின்ன செயல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 
நீங்கள் காதலில் இருக்கும் போது உங்களுக்குள் கட்டியணைப்பதும், முத்தமும் மட்டும் இருக்கக்கூடாது. வலிமையான தொடர்பும் , ஆழமான நெருக்கமும் இருக்க வேண்டும். சிறந்த நட்பு இருக்கு இடத்தில் மட்டுமே ஆழமான புரிதல் இருக்கும். அவருக்கு துணையாக இருங்கள், உங்கள் ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், ஒருவருக்கொருவர் கருத்துக்களை மதிக்கவும். உங்களிடம் கூறினால் தன்னுடைய பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் நம்ப வேண்டும்.
 
மோசமான நாளுக்குப் பிறகு மாலை நேரத்தில் அவர் புலம்ப நினைத்தால் அவர் புலம்பட்டும் விட்டுவிடுங்கள். ஆரோக்கியமான காதலுக்கு தொடர்பு கொள்வதும், கேட்பதும் மிகவும் முக்கியாயமானதாகும். நல்ல காதலி எப்போது பேச வேண்டும், அப்போது காதலர் பேசுவதை கேட்க வேண்டும் என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
 
சிறிய விஷயங்களுக்கெல்லாம் பெரிய சண்டையை ஆரம்பிக்காதீர்கள். ஒரு நாளை மோசமான நாளாக மாற்றவோ அல்லது முற்றிலுமாக உறவை முறித்துக் கொள்ளவோ சிறிய காரணங்களை கையில் எடுக்க வேண்டாம். சண்டை போட வேண்டிய விஷயங்களுக்கு சண்டை போட வேண்டும் என்பது உண்மைதான் ஆனால் அனைத்திற்கும் சண்டை போடுவது உங்கள் மீதான வெறுப்பைத்தான் அதிகரிக்கும். எதற்கு சண்டை போட வேண்டும் என்று தேர்ந்தெடுத்து சண்டை போடுங்கள்.
 
அவர் உங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதைப் பாருங்கள், நீங்கள் ஒன்றாகச் செய்யும் விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் உறவு முழுவதும் நீங்கள் அவரை எவ்வளவு பாராட்டினீர்கள் என்பதை அவரிடம் சொல்லவும் காண்பிக்கவும் வழிகளைக் கண்டறியவும். இது அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் கிடைத்த வெகுமதியாக நினைப்பார்கள். எனவே உங்களுடன் ஒரு நீண்டகால உறவில்இருப்பதில் அவருக்கு எந்த தயக்கமும் இருக்காது.
 
தன்னம்பிகையை விட பெண்களை அழகாக காட்டும் விஷயம் வேறு எதுவும் இல்லை. பாதுகாப்பின்மை மற்றும் சந்தேகங்கள் உங்களுக்குள் இருக்கும் சிறந்த குணத்தை அழிக்க அனுமதிக்காதீர்கள், நீங்கள் எந்த வகையான பெண் என்பதை இதிலிருந்துதான் அறிய முடியும். ஆண்களை இதைவிட பெரிதாக ஈர்க்கும் விஷயம் வேறெதுவும் இல்லை. இதனாலேயே நீங்கள் அதிகம் நேசிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.
 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்