முகப்பருக்களை உண்டாக்கும் உணவுகள்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10263
பல வருடங்களாக உணவுக்கும், பருக்களுக்கும் இருக்கும் உறவை பற்றி வாக்குவாதம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நாம் உண்ணும் உணவிற்கும், நம் சருமத்திற்கும் தொடர்பு இருப்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.
சாக்லெட், பர்கர், பொரித்த உணவுகள் மற்றும் இன்னும் பல சுவையான உணவுகளால் பருக்கள் ஏற்படும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொண்டால், பருக்கள் அதிகமாக வரும் என்று பலரும் நம்புகின்றனர். பருக்கள் உருவாக ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
செனை பசுக்களில் இருந்து எடுக்கப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் ஹார்மோன்கள் அதிகளவில் இருப்பதால், பருக்களுடன் பால் பொருட்களுக்கு தொடர்பு இருப்பது நம்பப்படுகிறது.
மிட்டாய், பிஸ்கட் அல்லது வெள்ளை பிரட்டை போன்ற பொருட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஊக்குவிக்கும் வகையை சேர்ந்தவை என்பதால், அது ஹார்மோனில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும்.
அதனால் பருக்கள் வருவதோடு மட்டுமல்லாமல், இருக்கும் பருக்களையும் மோசமடையச் செய்யும். பருக்கள் வருவதற்கு சாக்லெட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நம்பப்படுகிறது. இதில் சிறிதளவு உண்மையும் கூட இருக்கிறது. சாக்லெட்டில் பால் பொருட்கள், சுத்தரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் காப்ஃபைன் உள்ளது.
இவை மூன்றுமே பருக்கள் உருவாக காரணமாக இருக்கும் பொருட்கள். எண்ணெய் பசையுடன், ஸ்டார்ச் அதிகமாக உள்ள பிரெஞ்சு ப்ரைஸில் சுத்தரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இவை பருக்களை உருவாக்கும்.
அதிக அளவில் இறைச்சியை உண்ணும் போது, அவை பருக்கள் உருவாக காரணமாக அமையும். மேலும் இறைச்சி சாப்பிடுவதால், உடலில் உள்ள அமிலக்காரக் குறியீடு இருக்க வேண்டிய அளவை விட, அதிகமாக உயர்த்திவிடும்.