Paristamil Navigation Paristamil advert login

அலுவலகத்தில் வக்கிரமான ஆசாமிகளை சமாளிப்பது எப்படி?

அலுவலகத்தில் வக்கிரமான ஆசாமிகளை சமாளிப்பது எப்படி?

10 தை 2021 ஞாயிறு 08:46 | பார்வைகள் : 8975


 எல்லா அலுவலகங்களிலுமே வக்கிரமான சில ஆசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த நபர் உங்கள் அருகாலையில் வந்து நிற்கும் போது தனது பார்வையாலோ அல்லது மோசமான வார்த்தைகளாலோ உங்களை கூனிக் குறுக வைக்கலாம். அலுவலக சகா மீது பெப்பர் ஸ்பிரே தாக்குதல் தொடுக்க முடியாது என்பதால் மாத்தி யோசிங்க:

 
வக்கிர ஆசாமி பற்றி புகார் செய்தால், நீங்கள் கற்பனை செய்துகொள்வதாக கூறலாம். முதலில் உங்களை சங்கடத்திற்கு ஆளாக்கும் நபரிடம் இருந்து விலகி இருங்கள். கடுமையான நடந்து கொள்ள வேண்டாம். நட்பாகவும் இருக்க வேண்டாம். நீங்கள் இன்ட்டரஸ்டுடன் இருப்பதாக தவறாக நினைத்துக்கொள்ளக்கூடாது. அலுவல்ரீதியாக அணுக வேண்டிய காரியங்களைக்கூட இடைவெளியுடன் செய்யவும்.
 
பார்வையால் வெறிக்கும் பழக்கம் கொண்டவராக அவர் இருக்கலாம். இது உங்களை சங்கடத்தில் ஆழ்த்தினால் பொறுத்துக்கொள்ள வேண்டாம். அவர் அப்படி பார்த்து கொண்டிருக்கும் நேரத்திலேயே எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். இதை மறுக்க முடியாத நிலை உண்டாகும். அப்படியும் நிறுத்திக்கொள்ளவிட்டால், நேரடியாக கூறிவிடலாம்: “சில நேரங்களில் நீங்கள் என்னையே உற்றுப்பார்ப்பதாக தோன்றுகிறது. இது சங்கடம் தருகிறது”. இதன் பிறகும் தொடர்ந்தால் இன்னும் உறுதியான நடவடிக்கை தேவை.
 
 
 
“அந்த ரோஸ் நிற டாப் உங்களுக்கு சூப்பர். என் மனசு எங்கிட்ட இல்ல” என்பது போல பேசினால், அது உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கினால் பாராட்டு அல்லது வெறும் ஜொள்ளு என விட்டுவிட முடியாது. இது தேவையில்லாத பேச்சு என தெளிவாக சொல்லி விடுங்கள். அப்படியும் தொடர்ந்தால் மனிதவளத் துறையிடம் புகார் செய்யவும்.
 
முட்டாள்களுக்குகூட உடல்ரீதியாக தொடுதலில் ஈடுபடக்கூடாது என தெரிந்திருக்கும். ஆனால் இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்களிடம் தெளிவாக உணர்த்துவது உங்கள் பொறுப்பு. உங்கள் உடல் அருகே கைகளை கொண்டு வந்தாலோ, உங்கள் மீது சாய முற்பட்டாலோ, மேலதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்