Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் புரியாத புதிர்..

பெண்கள் புரியாத புதிர்..

26 மார்கழி 2020 சனி 11:29 | பார்வைகள் : 9665


 பெண்கள் புரியாத புதிர்கள் என்று சொல்லப்படுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள எல்லோரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அடிப்படை குணாதிசயங்களை ஆராய்ந்தால் ஆண்களைவிட பெண்கள் புதிரானவர்கள் இல்லை. ஆண்கள் கடுமையாக உழைக்க பிறந்தவர்கள். ஆதிகாலத்தில் விலங்குகளை வேட்டையாடி வீரத்தை காட்டினார்கள். 

 
பின்பு போர் புரிந்தார்கள். அடுத்து குடும்பத்தைக் காக்க கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்கள். ஆண்களின் அடிப்படைக் குணம் வேகமானதாக இருக்கும். அதே நேரத்தில் பெண்கள் குடும்பத்தை பேணுதல், அன்புகாட்டுதல், அரவணைத்தல் போன்ற குணாதிசயங்களை தங்கள் மரபணுக்களிலே கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் பெண்கள் தங்கள் மென்மையான உணர்வுகள் மூலமும், இதமான அணுகுமுறைகள் மூலமும் முரட்டுத்தனமான ஆண்களையும் இயல்பான வாழ்க்கைக்கு தகுந்தவர்களாக மாற்றிவிடுகிறார்கள்.
 
பெண்களிடம் இருக்கும் சிறப்பு குணங்கள் என்னென்ன தெரியுமா?
 
 
 
குடும்பத்தினர் அனைவரையும் அரவணைத்துச் செல்வார்கள். அதுபோல் தன்னிடமும் எல்லோரும் அன்பு காட்டவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். அதே நேரத்தில் திறன்வாய்ந்த, வெற்றிகரமான ஆணையே அனேகமாக எல்லா பெண்களும் விரும்புகிறார்கள்.
 
பெண்கள், தான் எப்போதும் மற்றவர்களால் நேசிக்கப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். தன்னை நேசிக்கும் ஆணுக்காக, தன்னை அலங்காரம் செய்து கொண்டு அழகாக தோன்றுகிறார்கள்.
 
மனைவியான பெண்ணின் மனது தாம்பத்ய தொடர்பு வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையிலும் ‘வேண்டாம்’ எனக் கூறுவதற்கு அவள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள். கணவர் ரொம்ப விரும்பினாலே அனுமதிக்கிறாள். இப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க குணாதிசயங்கள் சிலவற்றால், பெண்கள் சமூகத்தால் புரியாத புதிராக கணிக்கப்படுகிறார்கள்.
 
பெண்கள் எப்போதுமே தாங்கள் நேசிக்கும் ஆண்களால் ஏமாற்றமடையும்போது உணர்ச்சிவசப்பட்டு குழம்பி எளிதாக மனம் சோர்ந்து போகிறார்கள். ஆனால் அவர்கள் மிக எளிதாக எந்த ஆணையும் அவசரப்பட்டு நம்பி தன்னை ஒப்படைத்துவிடுவதுமில்லை.
 
ஆண்களைவிட பெண்கள் மனதளவில் பலமானவர்கள். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் குழப்பங்கள், கவலைகளில் இருந்து விலகி தன்னம்பிக்கை பெற்று புத்துணர்ச்சியோடு மீண்டும் எழுச்சி பெற்று விஸ்வரூபம் எடுப்பது பெண்களின் இயல்பாக இருக்கிறது.
 
உலக நடைமுறைகளை எளிதாக உள்வாங்கி காலமாற்றத்திற்குதக்கபடி தன்னையும் மாற்றிக்கொள்ளும் பக்குவம் இயல்பாகவே பெண்களிடம் உள்ளது. ஆணைக்காட்டிலும் ஆரோக்கியமாக, நீண்டகாலம் வாழக்கூடிய சக்தியையும் பெண் பெற்றிருக்கிறாள்.
 
பொதுவாக பெண், அதிக வெளியுலகத் தொடர்பு இல்லாமல், குடும்பத்தில் தனது உறவுகளைச் சுற்றி பின்னப்பட்டவளாக, தன்னை சார்ந்தோரைப் பராமரிப்பவளாக, வீட்டையும், அதில் உள்ளவர்களின் உடல் நலனையும் பேணிக் காப்பவளாக இருக்கிறாள். இந்தத் தாய்மையுணர்வுதான் அவளுக்குள் ஊறி பாரம்பரிய பண்பாக வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
 
தனக்கு பிடித்தவர்கள் வாழ்வதற்கும்-வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக்கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்துகொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும் பயன்படுத்திக்கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம். அதனால் பெண்கள் புதிரானவர்கள் அல்ல, புனிதமானவர்கள் என்பதே உண்மை. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்