Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் தாடி வைத்த ஆண்களை விரும்பக்காரணம்

பெண்கள் தாடி வைத்த ஆண்களை விரும்பக்காரணம்

16 கார்த்திகை 2017 வியாழன் 12:10 | பார்வைகள் : 9000


 இன்றைய பெண்களுக்கு மெல்லிய தாடி, மீசை வைத்திருக்கும் ஆண்களை மிகவும் விரும்புவார்கள். தாடி வைத்திருக்கும் ஆண்கள் கவர்ச்சியாக இருப்பதாக பெண்களின் கருத்தாக உள்ளது. 

 
மேலும் சாதாரணமாக ஆண்கள் தாடி மீசை வைத்தால் மிகவும் வீரமாகவும், கம்பீரமாகவும் தோற்றமளிப்பார்கள். இது பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
 
பெண்களுக்கு எப்படி நீண்ட கூந்தலும், ரெட்டை ஜடையும் அழகு என ஆண்கள் கருதுகிறார்களோ, அதே போல தான் ஆண்களுக்கு தாடியும் முறுக்கு மீசையும் அழகு என்று பெண்கள் கருதுகிறார்கள்.
 
நூறு ஆண்கள் இருக்கும் இடத்தில் தாடி வைத்திருக்கும் ஆண் மட்டும் தனித்துவமாக இருப்பார். மற்றும் மற்றவர்களது முகங்களைவிட இவர்களது முகம் எளிதாக மனதில் பதிந்துவிடும். இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.
 
 
 
நிறைய ஆண்கள் தாடி இல்லாத போது குழந்தை போல தோற்றமளிப்பார்கள், இதுவே அவர்கள் தாடி வைத்தவுடன் மிகவும் முதிர்ச்சியுடன் தோற்றமளிப்பார்கள். இந்த முதிர்ச்சியான தோற்றம் தான் பெண்களை கவர்ந்திழுக்கிறது.
 
தாடி மீசை என்பது மனதில் ஓர் விதமான உயர்ந்த எண்ணத்தை உருவாக்கும். இளைஞர்கள் மத்தியில் கெத்து என்பது போலவும், பெரியவர்கள் மத்தியில் மரியாதை என்பது போன்ற எண்ணத்தை தாடி, மீசை உருவாக்குகிறது.
 
பெண்களுக்கு எப்படி நீளமான கூந்தலை பராமரிப்பது எளிதான காரியம் இல்லையோ, அது போல தான் ஆண்களுக்கு தாடி, மீசை வைப்பதும். அவ்வப்போது அரிக்கும், அதை ஸ்டைல் என்ற பெயரில் நீவிவிடுவது போல யாருக்கும் தெரியாமல் சொறிந்துக் கொள்ள வேண்டும்.
 
மீசை, தாடி என்பது நமது பாரம்பரியமும் கூட, வேலைக்கு செல்கிறோம் என்ற பெயரில் என்னதான் மேற்கத்திய பாணியில் உடை அணிந்தாலும், வடநாட்டு இந்தியர்களை போல தாடி, மீசை இன்றி தோற்றமளித்தாலும், நமது ஊர்களில் ஏர் பூட்டி உழவு செய்யும் முதிய ஆண்மகனின் தோற்றத்திற்கு இணையாகுமா? நம்ம ஊரு, நம்ம பாரம்பரியம்! அதுதானே அழகு.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்