Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகளை அருகில் (இரவில்) படுக்க வைக்கலாமா?

குழந்தைகளை அருகில் (இரவில்) படுக்க வைக்கலாமா?

23 ஐப்பசி 2017 திங்கள் 11:30 | பார்வைகள் : 13467


 குட்டிக் குட்டி வீடுகள் பெட்டி பெட்டியான அறைகள்... இது தான் இந்தியா எங்கும் இருக்கும் பல குடும்பங்களின் நிலை. திருமணமான புதிதில் புதிய வீடு 

மற்றும் தனிக் குடித்தனம் மூலம் ஆண் பெண் தாம்பத்தியத்துக்கான தனிமை கிடைத்து விடுகிறது.
 
அந்த அன்பின் சாட்சியாக குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் குழந்தைகள் வளர வளரத் தம்பதிகளுக்கு தாம்பத்தியத்துக்கான முக்கியத்துவம் தேய்ந்து காணாமல் போகிறது. 
 
தங்கள் அன்பின் அரவணைப்பில் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தையைப் பெற்றோர் தங்களுடனே தூங்கப் பழக்குகிறார்கள். குழந்தை விவரம் அறிவதற்கு முன்பு அதே படுக்கையிலேயே தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்த பின்னும் பல வீடுகளிலும் இதுவே தொடர்கிறது. 
 
குழந்தைகள் தூங்கி விட்டார்கள் இருட்டில் என்ன தெரியப் போகிறது என்ற எண்ணத்தில் இது போல நடந்து கொள்வது குழந்தைகளிடம் மிகப்பெரிய மனபாதிப்பை ஏற்படுத்துவது குறித்த புரிதல் பெரும்பாலான தம்பதிகளிடம் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
 
பொருளாதார காரணத்தால் ஏற்படும் இடப்பற்றாக்குறை மற்றும் குழந்தை வளர்ப்பு முறையில் இருக்கும் அறியாமையே இதற்குக் காரணமாக இருக்கிறது. 
 
 
 
குழந்தைகளுக்காக என்று தங்களது தனிமை தாம்பத்தியம் உள்ளிட்ட பல விஷயங்களையும் தம்பதிகள் தியாகம் செய்ய வேண்டியுள்ளது. இந்தியாவில் குழந்தைகள் தூங்கிய பின்பு அதே அறையிலேயே பல தம்பதிகள். செக்ஸ் வைத்துக் கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. 
 
இது குறித்து குழந்தைகள் உளவியல் நிபுணர் கூறுகையில் ‘‘குழந்தைகள் எந்த விஷயத்தையும் தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். எக்ஸ்பிசனிசம் என்று ஒன்று இருக்கிறது.
 
தன் உடலை மற்றவர்களுக்குக் காட்டுவது மற்றும் மற்றவர்கள் உடலை எட்டிப் பார்த்து தெரிந்து கொள்வது என்று இரண்டு விஷயங்கள் குழந்தைகளிடம் இருக்கும். அப்பா அம்மாவுக்கிடையே இருக்கும் செக்ஸ் பற்றி ஒரு குழந்தை தெரிந்து கொள்ளும் போது தனிமை மற்றும் பயத்தை உணருகிறது.
 
அப்பாவும் அம்மாவும் தன்னை டாமினேட் செய்வதாக நினைத்து குழந்தைகள் அவர்களை வெறுக்கத் தொடங்குவார்கள். நம்மைத் தாண்டி அம்மா அப்பாவுக்குள் ஏதோ ஒரு விஷயம் உள்ளது என்ற எண்ணம் அது குறித்து தேடித் தெரிந்து கொள்ள குழந்தையைத் தூண்டுகிறது.
 
இதனால் அந்தக் குழந்தைகள் வெளியிடங்களில் மிஸ் பிகேவ் செய்யும் வாய்ப்பும் உள்ளது. ஆண் குழந்தையாக இருந்தால் பெண்கள் பற்றிய தவறான கண்ணோட்டம் ஏற்படலாம். பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இது போன்ற விஷயங்களைச் சிறு வயதில் நேரில் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. 
 
 
 
வளர்ந்த ஆண் பெண் இருவருமே குழந்தைகள் முன்பு ஆடை மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். செக்ஸ் என்ற விஷயம் சிறு வயதில் நெகட்டிவாக பதிந்து விட்டால் அதை மாற்ற முடியாது. பெற்றோர் செக்ஸ் வைத்துக் கொள்வதைக் கண் விழித்துப் பார்க்கும் குழந்தை அம்மாவை அப்பா கொல்லுவதாகவோ கொடுமைப்படுத்துவதாகவோ புரிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. 
 
இது போக தாங்க முடியாத மன அழுத்தத்தை குழந்தைகள் அனுபவிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது போலாகி விடும். குழந்தைகள் வளர்ந்து வயசாகும் வரை அவர்கள் மனதில் இது அறு வெறுப்பு அச்சம் பயத்தை உண்டாக்கி... அப்பாவின் மீதான வெறுப்பை ஏற்படுத்தும். 
 
குழந்தைகள் எந்த வயதில் இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனரோ அதற்கேற்ப பாதிப்புகளை சந்திக்கின்றனர். இந்த விஷயத்தை அவர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடுவதும் இல்லை. எனவே குழந்தைகள் இருக்கும் அறையில் செக்ஸ் வைத்துக் கொள்வதைப் பெற்றோர் கட்டாயம் தவிர்க்க வேண்டும். 
 
குழந்தைகள் ஆழ்ந்து தூங்குகிறார்களா என்பதை உறுதிப்படுத்தியப் பிறகு வேறு அறைக்கு சென்று விடலாம். குழந்தைகள் இல்லாத நேரத்தை தாம்பத்தியத்துக்குப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏழு அல்லது எட்டு வயதாகும் போது தனியாக படுக்க வைத்து பழக்குங்கள். 
 
குழந்தைகள் தூங்கியதும் வேறு அறையில் தாம்பத்தியம் வைப்பதாக இருந்தாலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்