Paristamil Navigation Paristamil advert login

உணர்வுகளுக்கும் எமது உடல் நிறைக்கும் உள்ள தொடர்பு!!

உணர்வுகளுக்கும் எமது உடல் நிறைக்கும் உள்ள தொடர்பு!!

31 ஆவணி 2017 வியாழன் 09:31 | பார்வைகள் : 8998


 உடல்நிறை எமது உயரத்திற்கேற்ப இருக்கும் போது நாம் மனநிறைவான சுகமான வாழ்க்கையை அனுபவிக்கிறோம். நிறைகூடிய மனிதர்கள் பலவிதமான உடல்நலக் குறையை அனுபவிக்கின்றார்கள். இரத்த அழுத்தம்,நீரிழிவு நோய் என்பது வழமையாக உடல்நிறை கூடிய மனிதர்களுக்கு வருவதைக் காணலாம்.

 
நிறைகுறைய விரும்பினாலும் எப்படி உடல் நிறையைக் குறைப்பது என்று தெரியாமல் பலபேர் அவதிப்படுவதை நாம் காண்கின்றோம். உணவுப் பழக்கங்கள் தான் அவர்களது உடல் நிறைகூடக் காரணம். ஆனால் அவர்களால் தமக்கு ஏற்படும் அளவுக்கதிகமான பசி உண வுத் தவனம் என்பவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை.
 
அளவுக்கதிகமான பசி,உணவுத்தவனம் ஏன் உருவாகின்றது என்று தெரிந்தால் நாம் சுலபமாக நிறையை குறைக்கலாம். எமது உடம்பும் மனமும் எப்போதும் சம நிலையில் இருக்க விரும்பும். இதனை கோமி யோஸ்ரேசிஸ் (Homeostasis) என்பார்கள். எமது உடம்புக்கு தன்னு ணர்வு உள்ளது. உடம்புக்கோ,மனத்திற்கோ அடிப்படைத் தேவைகள் குறைந்தால் அது பலவிதமான அறிகுறிகளை (Signal ) வெளியிடும்.
 
உடம்பு குளிர்ந்தால் நடுங்கும்,கூடினால் வியர்க்கும். அதுமாதிரி மனநிலை அமைதியாக இல்லையென்றால் எமது உடம்பு பலவிதமான வேறுபாடுகளைக் காட்டும். நாம் பொதுவாக வயிற்றின் அடிப்பகுதியில் இதனை உணர்வோம். (Gut  feeling, Intution). எமது மனதின் அடிப்படை நிலை நிம்மதி, சந்தோஷம் எப்போது அதன் நிலை குறைகிறதோ அப்போது அதனை நிவர்த்தி செய்ய உடம்பு முயற்சி செய்யும்.
 
நீங்கள் பயப்படும்போது அல்லது கோவப்படும் போது உங்கள் வயிற்றுப் பகுதியில் அதனை உணர்வது இல்லையா? நாம் அதை உணர்ந்து நாம் கோபப்படுகிறோம் என்று அறிந்து கொள்கின்றோம். அந்த கோப சக்தியை (நுநெசபல) உடம்பிலிருந்து வெளிவிட வேண்டும். அப்படிச் செய்யாதபோது உடம்பு இன்னுமொரு விதமாக அதனை வெளிவிடுகிறது. அதுதான் அளவுக்கதிகமான பசிக்கு (Appetite)  காரணம்.  பெரும்பாலான ஆராய்ச்சிகளில் நிறைகூடிய மனிதர்களும் (Stress ) அளவுக்கதிகமாக உழைப்பவர்களும் மிகவும் மனவருத்தத்தில் இருப்பதாக கண்டு பிடித்துள்ளார்கள்.
 
உணவு எப்படி மன அமைதியை தர முடியும் என்று பார்த்தால் எமது உணவு வகைகளில் உள்ள உப்புகள், இரசாயன இணைப்புகள் எமது மூளையில் செய்யும் தாக்கம் மனநிம்மதியைத் தர உதவுகிறது.இந்த மூளை இரசாயன உப்பு  மிகவும் முக்கியமான உப்பு. நாம் சந்தோஷமான உணர்வை உணர  அதேபோல் பாலில் இருக்கும் சீனி வகையான  உப்பு  எமக்கு திடீர் சக்தியை தரும்.அதனால் மனிதர்கள் சந்தோஷமாக இருக்க ஐஸ்கிறீம் (ஐஉந உசநயஅ) சாப்பிடுவார்கள். பெரும்பாலா னவர்கள் கவலையாக இருந்தால் நிறைய ஐஸ்கிறீம் சாப்பிடுவார்கள். இதன் காரணமாக ஐஸ்கிறீம் மனிதர்களின் மிகவும் விருப்பமான உணவாக உள்ளது.
 
உணர்வுகளுக்கு சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் சிலவகையான உணவுகளை மாத்திரமே நாடுவார்கள். ஏன் அப்படி நாடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு தேவையான  உப்புகள் அந்த உணவுகளில் இருப்பது தான் காரணம். நாம் முதலில் எந்த உணர்வுகள் பெரும்பாலும் தாக்கத்தை உடம்பில் ஏற்படுத்துகின்றன என்று பார்ப்போம்.
மனவருத்தத்தில் (Depression) இருக்கும் மனிதர்கள் 250 மடங்கு மேலதிகமாக சாப்பிடுவதாக கண்டு பிடித்துள்ளார்கள். நிறைகூடிய 50 மனிதர்களின் மன நிலையை சோதித்த போது ஐந்து மடங்கு பேர் மேலதிகமான ஆழ்ந்த வருத்தத்தில் அல்லது மனநிம்மதி குறைந்தவர்களாக இருப்பதை ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டது. (Depression  or  other  disorder)இந்த ஆராச்சிகள் அதனை எமக்கு தெளிவாக காட்டுகின்றன. ஐந்து மிகவும் முக்கியமான உணர்வுகள் பெரும்பாலானவர்களை அதிகமாகச் சாப்பிட ஊக்கு விக்கின்றன. இதில் நாம் உணர வேண்டியது உணர்வு களை அடக்கும் போது உதாசீனப்படுத்தும் போது தான் நாம் இப்படியான பசியை உணர்கிறோம். (Emotional hunger) அந்த உணர்வுகள் பயம்,கோபம்,பதட்டம் குற்ற உணர்வு ஆகியனவாகும். 

பயம்:     
பலவிதமான பயங்கள் மனிதர்களுக்கு இருக்கும். எமது உயிருக்கு ஆபத்து வரும்போது அது உண்மையான பயம். பல தடவை நாம் போலியான பயங்களுக்கு ஆளா கிறோம். தோல்வி அடைந்து விடுமோ என்று பயம் வாழ்க்கையில் மாற்றங்களுக்கு பயம்ஏதாவது நாம் நினைத்தது நடக்காமல் போய்விடுமோ என்று பயம் எதிர் காலம் எப்படி போகும் என்று தெரியாத பயம்ஏதாவது ஆபத்து நமக்கோ அல்லது எமது உறவினருக்கோ நடந்து விடுமோ என்று பயம் இப்படியான பயங்களை எமக்கு எப்படி இல்லாமல் செய்வது என்று தெரிவதில்லை. பெரும்பாலானவர்கள் இந்த பயங்களை உணர விரும்புவதில்லை. ஆனால் உடம்பு உண்மையாக உணரும். அதனால் அது சமநிலைப்படுத்த முயற்சி செய்து அதிகமான பசியை (Graving for food) உருவாக்குகின்றது.
 
கவலை:      
கவலைப்பட்டு நாம் அழும்போது நாம் அந்த உணர்வை வெளிப்படுத்துகிறோம். பலபேர் தாம் கவலையில் இருப்பதை வெளிப்படுத்துவது இல்லை. பலகாரணங்களுக்காக நாம் பெரும்பாலும் கவலையை வெளிப்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு தம் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி அவர்களை மிகவும் பாதித்திருக்கும். ஆனால் அவர்கள் நினைத்த மாதிரி ஒரு நிகழ்வு நடக்கவில்லையென்றால் அவர்கள் அந்த கவலையை முழுமையாக வெளியிட மாட்டார்கள். அந்த உணர்வு அவர்களுக்குள் எப்பவும் இருக்கும். இது அவர்களுக்கு பல வருடமாகத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
அதனை விட எப்பவும் மனிதர்கள் வெற்றி அடைய வேணும் என்று நினைப்பார்கள். அதனால் அவர்கள் எதுவும் பிழையாக நடந்துவிடக் கூடாது என்று கவலைப்படுவார்கள்( Worry). பெரும்பாலானவர்கள் இந்த உணர்வை தவிர்க்க விரும்புவார்கள். ஆனால் மனம் திரும்ப கவலைப் படும். அப்போது நாம் அதை உதாசீனப்படுத்துவோம். இதன் போது உடம்பு அந்த உணர்வை இன்னுமொரு வகையில் சமநிலைப்படுத்த முயற்சி செய்யும்போது கூடிய பசியை (Appetite) ஏற்படுத்தும். 

கோபம்
கோபம் என்ற உணர்வு எமது மிகவும் பலமான உணர்வு. அது எமது மனநிலையை மற்றவர்கள் உணராத போதுபொதுவாக எமது எதிர்ப்பை நாம் தெரிவிக்கிறோம். இந்த உணர்வு மிகவும் பிழையாக மனிதர்களால் பாவிக்கப் படுகிறது.
 
உனது அபிப்பிராயம் மற்றவர்களுக்கு சரியாகப் படவேண்டும் என்று இல்லை. ஒரு கலாசார மனிதர்கள் சரியென்று சொல்லும் ஒரு நிகழ்ச்சி அல்லது அனுபவம் இன்னுமொரு கலாசாரத்தில் பிழையாகச் சொல்லப்படுகிறது.
எமக்கு சரி என்றது மற்றவர்களுக்கு சரியாக இருக்கத் தேவையில்லை. பெரும்பாலான கோபப்படுபவர்கள் சமுதாயத்தில் பக்கத்து வீட்டுக்காரனிடம்தம்முடன் வேலை செய்பவர்களுடன் அதை வெளியில் காட்ட முடியாது அடக்கு வார்கள்;. அது உடம்பில் பல வகையான தாக்கத்தை உருவாக்கும். பல மனிதர்கள் தாங்கள் நினைத்ததை ஒழுங்காக செய்வதில்லை. தன்னை குறைவாக நினைப்ப தால் (மற்றவர்களை விட) அவர்கள் தன்னில் தானே ஆத்திரமாக இருப்பார்கள். தம்மில் ஆத்திரப்பட்டால் அவர் களை எப்படி சமநிலைப்படுத்துவது. அவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மனதை தற்காலிகமாக சந்தோஷப் படுத்துவார்கள். பிறகு அவர்கள் ஆத்திரப்படுவார்கள். தாங்கள் அளவுக்கதிகமாக சாப்பிடுவதாக அது பின்னர் பிழையாக (Negative  circute) வேலை செய்யும்.
 
பதட்டம்
நாம் தன்னுணர்வுள்ள மனிதர்கள். நாம் நேரம் எடுத்து எம்மை முக்கியப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். பெரும்பாலான மனிதர்கள் அதுவும் வெளிநாட்டில் இருப்பவர்கள் அதிகமான வேலை மனத்திருப்தி இல்லாத தன்மைகள் பெருமை போட்டி அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்த்தல் தொலைபேசி பாவிப்பது அளவுக்கதிகமாக விழாக்கள், நிகழ்ச்சிகள் (party ) அவர்களை மிகவும் பாதிக்கின்றன.
நேரக்குறைவு காரணமாக அழுத்தம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது. சில மனிதர்கள் காலையில் நித்திரையால் எழும்புப் போது பதட்டமடையத் தொடங்கி விடுவார்கள். அவர்களுக்கு அன்று முழுக்க பதட்டமான நாளாகவே அது இருக்கும். இது எமது உடம்பை பலவிதமாக பாதிக்கும். உடம்பு பலவிதமாக அதனை சமநிலைப்படுத்த முயற்சி செய்யும். அதில் ஒன்று அளவுக்கதிகமாக சாப்பிடுவது.
குறாத்திலும் சரியாக நடக்க வேணும் என்ற எண்ணம் உள்ளவர்கள்.  மற்றவர் கள் எம்மை எப்பவும் குறைவாக நினைக்கக் கூடாது என்ற எண்ணம்.
 
குற்ற உணர்வு  
குற்ற உணர்வு மனிதர்களின் முதல் பிரச்சினை. இந்த உணர்வு மிகவும் சக்தி குறைவான. (Low energy  and vibration ) உணர்வு. இதனால் இந்த உணர்வு உமது உடம்பில் சக்தியை குறைக்கும். நாம் சக்தியை கூட்ட உணவை நாடுவோம். நாம் எப்பவும் எல்ல் இருக்கும். நாம் எதிர்பார்த்த மாதிரி செய்ய முடிய வில்லை என்றால் எமக்கு குற்ற உணர்வு தோன்றும்.  இப்படித்தான் ஒரு மனிதன் இருக்க வேண்டும் என்று பல மனிதர்கள் நினைப்பார்கள். இதுவும் கலாசாரத்திற்கேற்ப மாறுகிறது. ஆனால் மனிதர்கள் அவர்களுடைய நம்பிக் கைக்கு மாறுதலாக ஒருவர் நடந்தால் அவரை பிழை விட்டுவிட்டார் என்பார்கள். அவரும் குற்ற உணர்வை அனுபவிப்பார். 
 
பெரும்பாலான மனிதர்கள் குற்ற உணர்வை அடைவது பிறரால் தான் என்பது அவர்களது சமய நம்பிக்கைகள் சமுதாய நம்பிக்கைகள் உறவினர்களின் நம்பிக்கைகள்.  இப்படி பலவிதமான நம்பிக்கைகள் குற்ற உணர்வை உருவாக்குகின்ற சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கலாம். நாம் அந்த உணர்வை உணர்ந்து வெளியே நிற்கின்றோம். குற்றத்தைச் சுட்டிக் காட்டுபவர்களும் குற்ற உணர்வை உணர்பவர்களும் உண்மையில் தமது நம்பிக்கையை உண்மையாக உணர்கிறார்கள். நம்பிக்கைகள் கலாசாரத் துக்கு கலாசாரம் மாறுகிறது. எமது நாட்டில் சாதிமாறினால் குற்றம்.  வெளிநாட்டில் வாழும் மனிதர்களுக்கு சாதி என்றால் என்னவென்று தெரியாது. எமது நாட்டில் ஒருவர் சாதிமாறி திருமணம் செய்தால் குற்ற உணர்வுடன் காலம் முழுவதும் வாழ்வார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதும் இந்த உணர் வால் பாதிக்கப்படுவார்கள். உறவினர்களால் கைவிடப்பட்டு தனிமையில் குற்ற உணர்வுகளுடன் வாழ்வார்கள்.
 
இந்த உணர்வுகளுக்கும் உணவுகளுக்கும் உள்ள தொடர்புகளை அறிய பலவித ஆராய்ச்சிகள் செய்யப் பட்டுள்ளன. Dr. Sarah leibowitz என்பவர் பதட்டம் (Tention ) எப்படி மனிதர்களை அளவுக்கதிகமாக  உண்ண வைக்கின்றது என்று தமது (Rocketeller  university ) ஆராய்ச்சியில் நிரூபித்துள்ளார். அவர் தனது ஆராய்ச்சியில் கொற்றிசோல் (Hormon  Cortisol  neuropeptide ) அதிகமாக சுரப்பது மனிதர்கள் பதட்டமாக இருக்கும் போது என்று கண்டுபிடித்துள்ளார். இது எமது மூளையில் நெரசழ நிவனை சுரக்க காரணமாக இருப்பதால்எம்மை அளவுக் கதிகமாக மாச்சத்து சாப்பிட தூண்டும் என்றும் நிரூபித்துள்ளார்.
ஒவ்வொரு உணவுகளும் ஒவ்வொரு வகை யான உணர்வை நாடும். எந்த வகையான உணவு எந்த உணர்வை நாடும் என்பதை நாம் அடுத்து வரும் கட்டுரையில் பார்க்கலாம்.
 
-திருமதி ஞானா உருத்திரன்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்