Paristamil Navigation Paristamil advert login

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்..

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்..

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10048


 அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நம் சருமத்தை செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்வது மிகவும் நல்லது. 

 
அவற்றில் ஒன்று தான் நம் வீட்டில் இருக்கும் கேரட். கேரட்டை பயன்படுத்தி நமது முகத்தை பாதுகாக்கலாம். கேரட் நம் உடலுக்கு மட்டும் சிறந்தது அல்ல, நம் சருமத்திற்கும் மிகவும் உகந்தது. கேரட் பேஸ் பேக் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 
 
2 கேரட்டை வேக வைத்து மசித்துக்கொள்ளவும். மசித்த கேரட்டுடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1/2 ஸ்பூன் தேன் , லெமன் ஜூஸ் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். 
 
இதனால் முகமானது பொலிவுடன் அழகாகக் காணப்படும். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் உங்கள் முகம் படிப்படியாக பொலிவடைவதை பார்க்கலாம். மேலும் இந்த கேரட் பேஸ் பேக் பருக்களை போக்கும் தன்மை கொண்டது

எழுத்துரு விளம்பரங்கள்