பெண்கள் ஆண்களை சந்தேகப்பட காரணங்கள்
27 சித்திரை 2016 புதன் 08:29 | பார்வைகள் : 8847
பெண்கள் சில சமயங்களில் ஆண்களை பற்றி தவறாகவும் நினைப்பதுண்டு. ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.
* நண்பர்களுடன் வெளியே சென்றால் ஆண்கள் மதுவருந்த தான் செல்கிறார்கள் என்ற எண்ணம். ஆண்கள் எப்போதும் பெண்கள் முன்பு எளிதாக புலம்பவோ, கலங்கவோ மாட்டார்கள், நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள்.
* எதையாவது பற்றி ஆண்கள் ஆழ்ந்து சிந்தனை செய்தால், தட்டிக்கழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று கருதுவது. ஆண்கள் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய முற்படுவதில்லை என்பதை பெண்கள் பெருமளவில் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.
* ஷாப்பிங் செல்ல அழைத்து ஆண்கள் வர மறுத்தால், தங்கள் மீது அன்பு குறைந்துவிட்டது, நாட்டம் இல்லை என்று எண்ணுவது. காலை முதல் மாலை வரை கணினி முன்பு உட்கார்ந்து அலுத்து போய் வருபவனை மாலை வெளியே அழைத்தால் அவன் வர மறுப்பது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதால் தான். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் சில சமயங்களில் பெண்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள்
* அலுவலகத்தில் இருந்து நேர தாமதமாக வந்தால், நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் பெண்களின் மனதில் சந்தேகம் எழுகிறது. டார்கெட், டேட்லைன் போன்றவை பற்றி பெண்களுக்கு பெரிதாய் தெரிவதில்லை என்பதால் தான் இந்த எண்ணங்கள் எழுகின்றன.
* வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஆண்கள் தப்புத்தண்டா செய்வார்களோ என்ற எண்ணம் சில பெண்களுக்கு எழுவது இயல்பு. சில ஆண்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காக மொத்தமாக எல்லா ஆண்களையும் குறை சொல்ல கூடாது.
எப்போதும் சந்தேக கண்ணுடன் பெண்கள் ஆண்களை பார்ப்பதால் தான் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் சொல்லாமல் மறைக்கிறார்கள். மேலும் பொய் சொல்லவும் செய்கிறார்கள். இதனால் தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.