தாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை

21 பங்குனி 2016 திங்கள் 17:09 | பார்வைகள் : 13022
படுக்கையறையில் சில விசயங்களைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகையில், தாம்பத்திய உறவிர்க்குப்பின் தவிர்க்க வேண்டியவைகளாக பாலியல் நிபுணர்களால் கூறப்பட்டவை….
அதாவது செக்ஸ் உறவு முடிந்ததும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே உடனே தூங்கிவிடுவது தவறு. இது தாம்பத்திய உறவின் வசீகரத்தை கொன்றுவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். உடனடியாக உறக்கத்தில் விழுவது, செக்ஸ் உறவு எவ்வாறு இருந்தது என சிந்திக்க விடாது. அந்த இனிமையான மனநிலையை ரசிக்கவும் முடியாது போய்விடும்.
உறவிற்குப் பின் குளித்து உடலை தூய்மைப் படுத்திக்கொள்வது நல்லதுதான். அதுவும் இருவரும் ஒன்றாக எனில் கூடுதல் சுகமிருக்கும். ஆனால் உடனே குளியலறை நோக்கி ஓடத் தேவையில்லை என்கிறார்கள் செக்சாலஜிச்டுகள். வேலை முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் துணை இன்னும் அந்த மன நிலையில் இருக்கலாம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். உடனே குளியலறை நோக்கி ஓடினால், ஏதோ தவறு போல என்றும் துணையை எண்ண வைக்கக்கூடும் என்கிறார்கள்.
இதுவும் பொதுவாக தம்பதியர்கள் செய்யும் தவறுதான். அதாவது, நெருக்கமான தருணத்திட்குப் பின் தமது நண்பரை அல்லது தோழியை போனில் அழைத்துப் பேசுவது. அலுவலக விசயங்களை நாம் நள்ளிரவில் பேசுவதில்லையே? அதைப் போல நட்பு ரீதியான பேச்சையும் காலையில் வைத்துக்கொள்ளலாமே? படுக்கையறை மகிழ்ச்சி வேளையில் இது ஓர் இடைஞ்சலாகவே இருக்கும். உறவில் உங்களுக்கு உண்மையான நாட்டமில்லை என்றும் துணையை எண்ணச்செய்யும்.
தாம்பத்திய உறவு வேளையிலும் அவர்கள் மனதை வேலையோ, படிப்போதான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி படிப்பு அல்லது வேலையின் போது செக்ஸ் எண்ணங்களில் மனதை அலைபாய விடுவது தவறோ, அதைப் போல தம்பதியரின் அந்தரங்க வேளையிலும் படிப்பு, வேலை என்று சிந்தனை ஓடினால் தப்பு!
தம்பதியர் தனித்தனியாக படுக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் மோக வித்தை புரிந்த அந்த இரவிலும் உடனே தலையணையையும், போர்வையையும் தூக்கிக்கொண்டு தனியாக தூங்கச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமல்ல. இது, அன்றைய இரவின் அழகான சூழ்நிலையைக் கெடுப்பது மட்டுமல்லாது. தொடர்ந்து வரும் இரவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1