Paristamil Navigation Paristamil advert login

அந்த நேரத்தில் பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி?

அந்த நேரத்தில் பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி?

17 பங்குனி 2016 வியாழன் 17:53 | பார்வைகள் : 12641


 இந்த உலகில் ஆண்களுக்கு, பெண் துணை இல்லாமல் வாழ்க்கை நடத்துவதில் இனிமை இருக்காது. அது போல், பெண்களும் ஆண் துணை இன்றி வாழ்வது அவ்வளவு இனிமை தராது.

 
இந்த உலகில், ஏழை-பணக்காரன், உயர்ந்தவன்- தாழ்ந்தவன், என பாகுபாடு இன்றி அனைவருக்கும் இயற்கையாக கிடைக்கும் சந்தோஷம் தான் அந்த உறவு. இது அனைவருக்கும் பொதுவானது. இதனாலே, ஆண்- பெண் உறவு மிகவும் இனிமையாக உள்ளது.
 
உறவு என்பது இருவரின் மீதுள்ள காதலினால் வெளிப்பட வேண்டும். மாறாக, உரிமை என்ற பெயரில் ஆண் ஆதிக்கம் கூடாது. பெண்களை மலர் போல் பாவிக்க வேண்டும். அப்போது தான் பள்ளியறையில் ஆண்கள் வெற்றி பெற முடியும்.
 
செயல்களில் ஆண்கள் சரியாக ஈடுபட வேண்டும்… கட்டுப்பாடும், ஒழுக்கமும் ஆண் தான் உடலுறவில் ஈடுபடுவதில் சிறந்தவன் என என்றும் எண்ணிவிட வேண்டாம். ஆண்களை விட பெண்கள் தான் உறவில் சிறந்து ஈடுப்படக் கூடியவர்கள் என ஆராய்ச்சிகளின் மூலமாகவே ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். என்ன தான் உறவில் ஈடுபடுவதில் இருவருக்கும் ஆசை இருப்பினும், உங்கள் துணை மீது உங்களுக்கு முழு உரிமை இருப்பினும் கூட, கட்டுப்பாடும்ஒழுக்கமும் மிகவும் அவசியமானது.
 
குறிப்பாக, ஆண்கள் பெண்களை அந்த நேரத்தில் உறவு கொள்ளும் முன்பும், அதில் ஈடுபடும் போதும், தங்கள் துணையை அடிமை போல் நடத்தக்கூடாது. தங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்க கூடாது. அவர்களது கருத்து அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
 
அடுத்து, பெண்களை அவர்கள் உடலை தொடுவது மூலமே அவர்கள் விரைவாக உணர்ச்சி அடைவதாக கூறப்படுகிறது.
பெண்களின் உடல் பாகங்களில் சில முக்கிய இடங்களை ஆண்கள் தொடும்போது அவர்கள் எளிதாக உணர்ச்சி அடைந்துவிடுவார்கள். அந்த இடத்தை தெரிந்துவைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் இடம் மாறுபடும்.
 
மேலும், பெண்களை உடலளவில் நெருக்குவதைவிட, மனதளவிலும் முதலில் தொட வேண்டும். பெண்ணை ஆண் கொஞ்சி விளையாடுதல் மூலம் இருவருக்கு இடையில் உள்ள இடைவெளி குறைந்து இறுக்கம் தளர்கிறது. இன்பம் அதிகரிக்கிறது. உறவுக்கு பின்பும்கூட கொஞ்சல் செய்வதை பெண்கள் விரும்புவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு ஆரம்பித்தாலே, அந்த செயல்பாடுக்கு முழு இன்பம் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐய்யம் இல்லை.  

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்