முதலிரவில் தம்பதிகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம்
9 பங்குனி 2016 புதன் 09:03 | பார்வைகள் : 8660
பொதுவாக வாழ்க்கையில் கணவன் – மனைவி தாம்பத்யம் என்பது புனிதமானது; பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே அளவுக்கு சந்தேகங்களும் இருக்கலாம்.
என்னதான் உடலளவில் பலசாலியாக இருப்பவர்களும், முதலிரவு நாளில், மனைவியுடன் தனிமையில் தள்ளப்படும்போது, ஒருவித அச்சம், பீதி இருப்பது இயற்கையே. பலருக்கு முதலிரவை நினைத்தே ஒருவித பயம் ஏற்படக்கூடும், இந்த பயம் ஆண்/பெண் இருபாலருக்கும் இருப்பது இயல்பே. வேறு சிலருக்கு முன் கூட்டியே விந்தணு வெளியேறி விடுமோ முழு அளவில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள முடியாதோ என்பன போன்ற பலவாறான சந்தேகங்கள் எழலாம்.
அந்த சந்தேகங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், தாம்பத்தியத்தை பொருத்தவரை இருவரும் ஒருங்கே, ஒரே நோக்கத்துடன் மாற்று சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல் புணர்ச்சியில் ஈடுபடுதல் அவசியம். வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். அப்படியே உங்களுக்கு ஏதேனும் குறை இருப்பதாக, இருபாலரில் யாராவது உணர்ந்தால், திருமணம் ஆகி ஓரிரு மாதங்களுக்குள் உரிய மருத்துவரை அணுகி உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணவும்.
முதலில் மனஅழுத்தம் அறவே கூடாது. மனதை இலேசாக வைத்துக் கொண்டு, தாம்பத்தியத்தை மேற்கொள்ளுங்கள். ஒருவித பயம் அல்லது அழுத்தத்துடன் நீங்கள் புணர்ச்சி கொள்வீர்களானால், அது உங்களுக்கும் திருப்தி அளிக்காது. உங்களின் துணையையும் திருப்தி கொள்ளச் செய்யாது. குறிப்பாக பெண்கள் முதலிரவை நினைத்து அதிக பயத்துடன் இருப்பார்கள். கவலைப்படாதீர்கள் முதலிரவு அன்பே தாம்பத்தியம் வைத்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எனவே கவலையின்றி மனஅழுத்தம் இன்றி இருங்கள். களிப்புடன் தாம்பத்தியத்தை வைத்துக் கொள்ளுங்கள்.