Paristamil Navigation Paristamil advert login

காதல் ஹார்மோன் என்ன செய்யும்

காதல் ஹார்மோன் என்ன செய்யும்

23 மாசி 2016 செவ்வாய் 10:05 | பார்வைகள் : 8760


 மூளையின் உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன்தான் மனிதர்களின் காதல், காம உணர்வுகளை தூண்டுகிறது. எனவே இதனை காதல் ஹார்மோன் என்று செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த ஹார்மோன் தம்பதியரிடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது.

 
குழந்தை பிறப்பு, மனஅழுத்தம் போக்குவது, உள்ளிட்ட 11 வகையான நன்மைகளை செய்கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைப்போதலாமஸின் பராவென்ட்ரிகுலர் உட்கருவில் சுரக்கிறது ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன். தாம்பத்திய உறவிற்குப் பின்பு பெண்களுக்கு ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால் கணவர் மீதான காதல் அதிகமாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதனால் உறவு முடிந்த பின்னரும் கணவரை கட்டிக்கொண்டு உறங்குவது.
 
 
முத்தம் கொடுப்பது என அன்பால் திணறடிக்கின்றனராம். மனிதர்களின் காம உணர்வுகளை கிளர்ச்சியடையச் செய்கிறது. மூளையில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி தம்பதியர் காதலர்கள் இடையேயான உறவை, பிணைப்பை அதிகரிக்கிறது. அடிக்கடி கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவதன் மூலம் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. 
 
கர்ப்பகாலத்தில் சுரக்கும் “ஆக்ஸிடோசின்” ஹார்மோன், கர்ப்பப்பைக்கும் நன்மையை ஏற்படுத்துகிறது. பெண்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு பிரசவ காலத்தில் இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்து எளிதான பிரசவத்தை ஏற்படுத்தும்.
 
அதிகரிக்கும் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையேயான உறவுப்பிணைப்பினை அதிகரிக்கும். நேசத்தோடு பழகுவதற்காக சூழலை உருவாக்கும். மனஅழுத்தம் சிலருக்கு மிகப்பெரிய பிரச்சினையை தரும். தூக்கத்தைக் கூட கெடுக்கும். இந்த ஆக்ஸிடோசின் சுரப்பு மனஅழுத்தம் தரும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. நன்றாக உறக்கத்தை தரும் என்கின்றனர் நிபுணர்கள்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்